ரூம் பாய்: பலே பாய்

சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் இருந்து விடுதலை ஆகி வருகிறான் சஞ்சய். ஏலகிரி மலையில் உள்ள ஹோட்டலில் வேலைக்கு சேர்க்கிறான். வாழ்க்கை நல்லபடியாக போய்கொண்டிருக்கும்போது கூர் நோக்கு இல்லத்தின் வார்டன் கொலை செய்யப்படுகிறார். மற்றொரு நாள் ஹோட்டலின் மேனேஜர் மர்ம மனிதரால் கொலை செய்யப்படுகிறார். இந்த இரண்டு கொலைகளிலும் சஞ்சய் மீது சந்தேகம் கொள்கிறது போலீஸ். கொலை செய்தது சஞ்சயா, இல்லை வேறொருவரா அதற்கு காரணம் என்ன என்பது மீதி கதை.

ஜெகன் ராயன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படத்தின் முதல் பாதி பெரிய ட்விஸ்ட்களோ, திருப்பங்களோ இல்லா¬ல் கதையை நகர்த்தி செல்கிறார்கள். இரண்டாம் பாதி கதை வேகமாக நகர்கிறது. பல முக்கிய கதாபாத்திரங்கள் இரண்டாம் பாதியில் தான் வருகிறார்கள். ஆனால் ஒரு த்ரில்லர் படமாக திருப்தி தருகிறது.
சஞ்சயாக நடிக்கும் ஹீரோ நிகில் ஆக்ஷன் காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார். ரொமான்ஸ் காட்சிகளில் திறமை காட்டுகிறார். ஹீரோயின் ஹர்ஷா ஒரு சில காட்சிகளில் வந்தாலும் மனதில் நிற்கிறார்.

அடுத்த முறை வெளியூர் ஹோட்டலில் தங்க நேர்ந்தால் அறையில் ரகசிய மைக்ரோ கேமரா இருக்கிறதா என சோதனை செய்யும் எண்ணம் வரும். எண்டர்டெயின்மெண்ட்டோடு, விழிப்புணர்வும் தருகிற படம்.

Leave A Reply

Your email address will not be published.