தொன்மையான நாகரீகத்தை பேசும் நாகபந்தம்: ஜூலை 3ல் ரிலீஸ்

கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நாகபந்தம்’. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக வரும் ஜூலை 3 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளொல் வெளியாகிறது வெளியாகவுள்ளது.
இப்படத்தில் விராட் கர்ணா நாபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, பி.எஸ். அவினாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சௌந்தர் ராஜன் எஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அபே இசையமைத்துள்ளார்.

படத்தின் தமிழ் பதிப்பு அறிமுக நிகழ்வு நடந்தது. இதில் நடிகர் விராட் கர்ணா பேசியதாவது: இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆன்மிகம் மற்றும் பக்தி சார்ந்த விஷயங்களில் அதிகமாக ஈடுபட ஊக்குவித்து வருகிறார்கள். ஏனெனில் அது மனதிற்கும் உடலுக்கும் அமைதியையும் சக்தியையும் அளிக்கிறது. ‘நாகபந்தம்’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவமும் எனக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை முடித்த பிறகு நான் ஆன்மிக ரீதியாகவும், மனதளவிலும் மிகவும் வலிமையாக உணர்கிறேன்.

இந்தப் படம் இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், தைரியம், கோவில்களின் மரபு மற்றும் நமது தொன்மையான நாகரீகத்தின் பல அம்சங்களை பேசுகிறது. நம் நாட்டின் வரலாறு மற்றும் ஆன்மிக மரபுகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியாக இந்தப் படம் இருக்கும்.

‘நாகபந்தம்’ திரைப்படத்தில் நான் ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஒரு அறிமுக நடிகராக இந்த வாய்ப்பு எனக்கு மிகவும் முக்கியமானது. இந்தக் கதாபாத்திரத்திற்காக நான் முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளேன். என்றார்.
=======

Leave A Reply

Your email address will not be published.