புதியவர்களுடன் கைகோர்க்கும் இளையராஜா

ஆர்.எஸ்.குளோபல் மூவி மேக்கர்ஸ் சார்பில் எஸ்.கே.ஸ்ரீதர் தயாரி’கும் படம் “இராவணன் சோலையில் சிவன் மலை” இப்படத்தில் ஆராதனா பட், ஸ்ரீ சத்யா, தலைவாசல் விஜய், கஞ்சா கருப்பு, முத்துகாளை, ஆத்தங்குடி இளையராஜா, பிரபா, ஷர்மிளா, ஜனனி அம்மாள் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இளையராஜா இசை அமைக்கிறார். அவரது இசையுடன் அவரது ஸ்டூடியோவில் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இளையராஜா, கங்கை அமரன், இயக்குனர் ஞான ராஜசேகர் இயக்குனர் பாணர், ஆகியோர் பங்கேற்றார்கள். இளையராஜா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

Ðடத்திற்கு எம்.வி.பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார்.தென்னகத்தில் பல மலைப்பகுதிகளில் படமாகும் இப்படத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பல நடிகர்கள், நடிகைகள் நடிக்கின்றனர்.

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட இந்த படம், இயற்கை எழில்கொஞ்சும் வெள்ளிமலை பகுதியில் முதற்கட்டமாக படப்பிடிப்பு துவங்குகிறது.

Leave A Reply

Your email address will not be published.