எனிமி ஆஃப் தி ஸ்மெக்ளர்ஸ்: கடல் ஆக்ஷன்

கடல் வழி கடத்தல் பற்றி ஏராளமான படங்கள் வந்திருக்கிறது. அப்படி ஒரு படத்தை ஒரு கஸடம்ஸ் அதிகாரியே தனது அனுபவத்தை கொண்டு ஒரு படம் இயக்கினால் எப்படி இருக்கும் அதுதான் ‘எனிமி ஆஃப் தி ஸமக்ளர்’. டி.சமயமுரளி என்ற கஸ்டம்ஸ் அதிகாரி தனது அனுபவத்தை திரைப்படமாக தந்திருக்கிறார். சரண் சக்தி, லால், ராதிகா சரத்குமார், சக்கரவர்த்தி காளி வெங்கட், பாலசரவணன் என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்து வெளிவந்திருக்கிறது.

பத்திரிகையில் வருகிற செய்தியெல்லாம் சும்மா தம்மா துண்டு பிரச்சாரங்கள் என்ற அறிமுகத்தோடு 2500 கோடி கடத்தல் சமாச்சாரத்தை பேசுகிறது படம். படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் படத்தின் நாயகன் சரண் சக்தி குறுக்கு வழியில் சம்பாதிக்க கடத்தல் கும்பலில் சேர்கிறார். படிப்படியாக வளர்ந்து 2500 கோடி சரக்கை கடத்தும் பிராஜக்டை கையில் எடுக்கிறார்.

துபாயில் இருந்து அனுப்பும் 2500 கோடி பெருமானம் உள்ள கடத்தல் பொருளை துறைமுகத்தில் இருந்து வெளியே கொண்டு வர சக்தி சரணும் அவரது நண்பர் பால சரவணணும் முயற்சி செய்கிறார்கள். வெளியே கொண்டு வரப்படும் அந்த கடத்தல் பொருட்கள் பவர்புல் கஸ்டம்ஸ் அதிகாரியான சமயமுரளியால் கைப்பற்றப்படுகிறது. அப்படி கைப்பற்றப்பட்ட பொருளை கையில் வைத்துக் கொண்டு அதற்கு காரணமானவர்களை எப்படி பொறி வைத்து பிடிக்கிறார் என்பதுதான் மீதி கதை.

இப்படத்தில் இயக்குனர் சமய முரளி கஸ்டம்ஸ் துறையில் பணியாற்றியவர் என்பதால் அந்த துறையின் நுணுக்கங்களை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். தனது சொந்த வாழ்க்கையில் இருந்து ஒரு கமர்சியல் கதையை எடுத்து திரைப்படமாக தந்ததற்காக டைரக்டரை பாராட்டலாம். படத்தின் ஹீரோ சரண் சக்தி சிறிது படபடப்புடன் கொஞ்சம் ரொமான்ஸ் கலந்து நன்றாக நடித்து இருக்கிறார். அவருக்கு துணையாக வரும் பால சரவணன் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜே.டி.சக்கரவர்த்தி வில்லனாக மிரட்டி இருக்கிறார். மெயின் வில்லனாக வரும் லால் அனுபவத்தால் அசாத்தியமான நடிப்பை தந்திருக்கிறார். ராதிகா நாயகனின் அம்மாவாக சென்டிமெண்ட்டை கொட்டுகிறார். சாம் டேனியல் பின்னணி இசை படத்தை பரபரப்பாக கொண்டு செல்கிறது. ஆக்ஷன் பட ரசிகர்களுக்கு அக்மார்க் படம்.

Leave A Reply

Your email address will not be published.