டோரதி: பாலினம் தாண்டி மனிதம் பேசும் டோரதி

90களில் நடப்பது மாதிரியான கதை மதுரையிலுள்ள கிராமம் ஒன்றில், சாதி வெறியால் தன் அம்மாவையும், அக்காவையும் இழந்த சுப்பு (சனந்த்), தன் அப்பா (முத்துக்குமார்), அண்ணன்களுடனும் வாழ்ந்து வருகிறார். தன் பால்ய காலம் முதல் உயிர்த்தோழனாக இருக்கும் கார்த்தியுடன் (ரிஷிகாந்த்) பொறுப்பில்லாமலும் வாழ்கிறார், என்றாலும் சுப்புவுக்கு, தன் குடும்பம் மீதும், சாதிய அமைப்புகள் மீதும் வெறுப்பிருக்கிறது.

இந்நிலையில், சுப்புவின் அண்ணன் சவுந்தரராஜா டோரதி (கீர்த்தி சுரேஷ்) என்ற மலையாள பெண்ணை திருணம் செய்து அழைத்து வர அவர் மீது சுப்பு அதீத நெருக்கம் காட்ட பிரச்சினை தொடங்குகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.

கோபக்கார இளைஞனுக்கான துடுக்குத்தனம், காதலின் வலி, நண்பன் மீதான பாசம், அவமானங்கள் தரும் வேதனை, துப்பாக்கியும் கையுமாக நடக்கும் மனப்போராட்டம் என உணர்ச்சிக் கொந்தளிப்புள்ள கதாபாத்திரத்தைக் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார் ரிஷிகாந்த். ஆக்ரோஷம், சேட்டை, பாசம் என வழக்கமான இளைஞனுக்கான மீட்டரிலும், உணர்வுகளோடு மல்லுக்கட்டி, அன்பைத் தேடும் மீட்டரிலும் படத்தைத் தாங்குகிறார் சனந்த். சிறிய திரைநேரமே வந்தாலும், தேவையான தாக்கத்தைக் கொடுத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
முத்துக்குமார், ராமச்சந்திரன் துரைராஜ், ஜீவா சுப்பிரமணியன், சௌந்தரராஜன் ஆகியோர் தங்கள் கேர’டர் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். 90களின் மதுரை மாவட்ட கிராமத்தையும், வட இந்தியாவின் நிலப்பரப்பையும் நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ். திரு.

அடிப்படைவாதம், ஆணாதிக்கம், சாதியம், போலி கௌரவம் போன்ற பிற்போக்குத்தனங்களைக் கேள்வி கேட்கும் வசனங்களும், கதாபாத்திரங்களின் மனமாற்றங்களைப் பேசும் வசனங்களும் கைதட்டல் பெறுகின்றன.பாலியல் பாகுபாடு, திருநர் சமூகத்தின் அகநிலை எனத் தமிழ் சினிமா பேசத் தயங்கும் விஷயங்களைத் தொட்டிருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு விருதுகள் காத்திருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.