வெளியீட்டுக்கு முன்பே அனைத்து உரிமங்களும் விற்கப்பட்ட ‘ஹைக்கூ’

‘ஜோ’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருளானந்து தயாரித்துள்ள படம் ‘ஹைக்கூ’ , யுவராஜ் சின்னசாமி இயக்கி உள்ளார். இதில் ‘ஜோ’, ‘கோழிப்பண்ணைசெல்லதுரை’ படப் புகழ் ஏகன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் ‘மின்னல் முரளி’, ‘சேஷம் மைக்கேல் பாத்திமா’ படப் புகழ் பெமினா ஜார்ஜ், மற்றும் ‘கோர்ட்ர் ’ படத்தில் நடித்த ஸ்ரீதேவி அப்பல்லா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
சித்துத் குமார் இசை யமைத்திருக்கிறார். படம் வருகிற 23ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படம் தியேட்டரில் வெளியாவதற்கு முன்பே ஓடிடி உரிமம், ஆடியோ உரிமம், வெளிநாட்டு உரிமம் உள்ளிட்ட அனைத்து உரிமங்களும் விற்கப்பட்டு விட்டது. இதுகுறித்து தயாரிப்பாளர் அருளானந்து கூறியதாவது:

சந்தர்ப்ப சூழ்நிலையால் பெண்கள் கல்லூரியில் படிக்க வேண்டிய சூழல் ஒரு மாணவனுக்கு ஏற்படுகிறது. அங்கு அவனுக்கு நடக்கும் காதல், மோதல் உள்ளிட்டட் வைகளை மையமாக கொண்டு இப்படம் தயாராகி இருக்கிறது.
இது ஒரு நூதன காதல் கதை . இப்படியும் இருக்கலாமே… என்று அனைவரும் ஏற்கக்கூ டிய வகை யிலேயே கதை க்களம் உருவாக்கப்பட்டிட் ருக்கிறது. எல்லா தரப்பினருக்கும் பிடிக்கும்.

இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை நெடபிளிக்ஸ் நிறுவனம் நல்ல விலை கொடுத்து வாங்கி உள்ளது. அனைத்து உரிமங்களும் விற்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டில் 300 தியேட்டர்களில் வெளியிட இருக்கிறோம். என்றார்.

Leave A Reply

Your email address will not be published.