‘மக்கள் காவலன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

‘மக்கள் காவலன்’ படத்தில் இடம்பெற்ற ‘இக்னோர்’ (IGNORE) எனும் முதல் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், நடிகர் கே. மணிகண்டன் நடிப்பில் உருவாகி வரும் அதிரடித் திரைப்படமான ‘மக்கள் காவலன்’ படத்திலிருந்து ‘இற இறகாக..’ எனும் இரண்டாவது பாடலை பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

பாடலாசிரியர் ஜோதி கண்ணாவின் வரிகளில், நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துப் பாடியுள்ள இந்தப் பாடல், நாயகன் தனது கடினமான உலகத்திலிருந்து விடுபட்டு, காதலியின் (திவ்யா ஸ்ரீ பாதா – இந்தப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார்)அன்பின் மூலம் காதலின் மீதான நம்பிக்கையை எவ்வாறு பெறுகிறான் என்பதை அழகாகச் சித்தரிக்கிறது.
நாயகனின் யதார்த்தமான வாழ்வியல், தொழில் மற்றும் போராட்டங்கள் என அனைத்தும் காதலியின் அன்பினால் ஏற்படும் அந்தத் தூய்மையான தருணத்தின் ஆழத்தில் கரைந்து போகின்றன.

காதலில் விழுவதன் மந்திரத்தை உணர்த்தும் இந்த இனிய காதல் பாடல், ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் ஆன்மாவைப் பிரதிபலிக்கிறது. நீதிக்காக எப்போதும் குரல் கொடுக்கும் மக்களின் பாதுகாவலனாகத் திகழும் நாயகனின் மனநிலையை இந்தப் பாடல் நேர்த்தியாக வெளிப்படுத்துகிறது. பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் பா. ரஞ்சித், அதிதி ஆனந்த் ஆகியோரின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தை சந்தோஷ்குமார் எழுதி இயக்குகிறார்.

காவல் துறையைச் சார்ந்த ஒரு மனிதன் கண்ணியத்துடன் வாழ விரும்புகிறான். ஆனால், ஊழல் நிறைந்த அமைப்பு அவனைச் சூழும்போது, அவனுக்கு முன் இரண்டு வழிகள் மட்டுமே எஞ்சுகின்றன. ஒன்று அடிபணிவது; மற்றொன்று எதிர்த்து நிற்பது. ஒரு தனிமனிதனின் உயிர் பிழைப்பதற்கான போராட்டமாகத் தொடங்கும் இந்தக் கதை, காலப்போக்கில் மிகப்பெரிய பரிமாணத்தை எட்டுகிறது. இது அவனை, அவன் ஒருபோதும் விரும்பாத ஒரு தலைவனாக மாற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளுகிறது. போராட்டம் தீவிரமடைந்து, அதற்கான விலை அதிகரிக்கும்போது, ஒரு சாதாரண மனிதனுக்கும் மக்களின் பாதுகாவலனுக்கும் இடையேயான எல்லை மெல்ல மெல்ல மறையத் தொடங்குகிறது.

‘மக்கள் காவலன்’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Leave A Reply

Your email address will not be published.