நீண்ட நாள் எதிர்பார்க்க வைத்த சசியின் நூறு கோடி வானவில். ஜீ5 தளத்தில் 6ம் தேதி வெளியாகிறது. மாதவ் மீடியா சார்பில் பாலாஜி காபா மற்றும் அருண் அருணாச்சலம் புரடக்சன் சார்பில் அருண் அருணாச்சலம் தயாரிக்க, ஹரீஷ் கல்யாண், சிதி இத்னானி, சின்னி ஜெயந்த், தம்பி ராமையா, கோவை சரளா, வி ஜே பார்வதி நடிப்பில் உருவாகி உள்ள படம். எப்போதுமே சென்டிமெண்ட் படங்களை இயக்கும் சசி இதில் இரு முரண்பட்ட காதலை சொல்லி அதன் சிக்கலை விவரித்து நல்லபடியாக முடித்து வைக்கிறார். படத்தின் கதை இதுதான்…
கோவாவை மையமாகக் கொண்டு இயங்கும் யூ டியூப் சேனல் ஒன்றில் நிகழ்ச்சி இயக்குனராக பணியாற்ற சென்னையில் இருந்து செல்கிறார் வினோத் ( ஹரிஷ் கல்யாண்). கொடுமைக்கார அப்பாவால் ( சம்பத்) பாதிக்கப்பட்ட அம்மாவால் வளர்க்கப்பட்ட பிள்ளை. அப்பா இப்போது வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ, அப்பாவையும் சித்தியையும் வெறுக்கிறார் வினோத்.
கோவா சென்ற இடத்தில் தொ¬க்காட்சி தொகுப்பாளராக வேண்டும் என்ற ஆர்வத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பென்னியை (சித்தி இத்தானி) சந்தி’கிறார். பார்த்தவுடன் காதல் பற்றிக கொள்கிறது. அவரை தனது சேனலில் சேர்த்து பெரிய ஆளாக்குகிறார். அவரை மும்பை வரை கொண்டு செல்ல திட்டமிடுகிறார். இந்த நேரத்தில் சித்தி இத்னானி ஏற்கெனவே ஒருவரை காதலித்து அவர் ஒரு விபத்தில் சிக்கி கோமாவில் இருப்பது தெரிகிறது. இதனால் தனது கோமா காதலனையும் விட முடியாமல், ஹரிஷ் கல்யாண் காதலையும் ஏற்க முடியாமல் க்கிறார் சித்தி இத்னானி. இந்த இடியாப்ப சிக்கல் எப்படி தீர்த்து வைக்கப்படுகிறது என்பதுதான் படத்தின் கதை.
கோவா ஸ்கூட்டர் கேர்ள் என்ற பெயரில் அறிமுகமாகும் சித்தி இத்னானியின் கன் க் குழி அழகு பாதி படத்தை தாங்கி பிடிக்கிறது. காதல் பொங்குவதும் பின்னர் அது சிந்துவதுமாக பிரமாதமாக நடித்துள்ளார். ஹரிஷ் கல்யாண் அவருக்கு ஈடுகொடுத்து நடிக்கிறார். அவரை பிரியும் தருணங்களில் கண்ணீரை வர வழைக்கிறார். அருமையாக திரைக்கதை வசனம் எழுதி, நடிக நடிகையரிடம் வேலை வாங்கி மற்ற தொழில் நுட்பர்களை சரியாக பயன்படுத்தி இயக்கி அசத்தி இருக்கிறார் சசி.
கிளைமாக்சில் ஹரிஷின் இரண்டாவது தாயும் தந்தையும் அறிமுகமாக கியூட் மற்றும் கே.பாலச்சந்தர் டச். ”உன் மேல வந்த காதலை மறக்கவும் முடியாம , உன்னை சமாதானப்படுத்தவும் முடியாம , ஒரு கால்ல செருப்பு போட்டுட்டு இன்னொரு பக்கம் வெறுங்காலோடு நடக்கிற மாதிரி தவிக்கிறேன்” நம்மோட வாழ்க்கையை நாம்தான் முடிவு செய்யணும்” என்பது உள்ளிட்ட வசனங்கள அருமை.
சித்து குமார் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் அருமை. பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு வண்ணமயமாக ஜொலிக்கிறது .
மொத்தத்தில் தீபாவளியின் வண்ணமாயமான காதல் மத்தாப்பு