அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ, வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட படைப்புகளைத் தயாரித்த அர்கா மீடியாஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் ஷோபு யார்லகட்ட, பிரசாத் தேவினேனி ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் மதுமிதா இயக்கியுள்ளார். அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு பிரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். முஜீப் மஜீத் இசையமைதுள்ளார்
‘ஜான் டோ’ என்பவர் யார்? பாதிக்கப்பட்டவரா, கொலைகாரனா அல்லது காணாமல் போன குழந்தையா? என்பதைச் சுற்றி இப்படத்தின் கதை நகர்கிறது. சந்துரு உண்மையைத் தேடிப் பயணிக்கும்போது, ஜான் டோவைப் பற்றிய உண்மையை யாரும் எதிர்கொள்ளத் தயாராக இல்லையென்றால் என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. பார்வையாளர்களால் எளிதில் யூகிக்க முடியாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அர்ஜுன் தாஸ் முதன்முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.