ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் ‘கிங் ‘ படத்தின் முதல் பாடல்

ஷாருக்கானின் பிறந்தநாளில் வரவிருக்கும் ‘கிங்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தூ மில் ஜாயே ‘ எனும் முதல் பாடலை வெளியிட்டிருக்கிறார். இந்தப் பாடலின் மூலம், ஒரு ராஜாவைப் போல் எப்படி நேசிக்க வேண்டும் என்பதை உலகிற்கு அவர் காட்டியிருக்கிறார். காதல் – அதிரடி – அவரது மிரட்டலான, திகிலூட்டும் பாணி ஆகியவை கலந்த இந்தப் பாடலில் தீபிகா படுகோனும் இடம் பிடித்துள்ளார். மேலும், இந்தப் பாடலில் அர்ஜித் சிங் மற்றும் எட் ஷீரன் ஆகியோரின் உலகளாவிய இசைப் பங்களிப்பும் இடம்பெற்றுள்ளது.

இது இசை மற்றும் திரையுலகின் மிக முக்கியமான கலைஞர்களை ஒன்றிணைக்கிறது. அர்ஜித் சிங்கின் அற்புதமான குரலும், எட் ஷீரனின் தனித்துவமான ராப் இசைப் பாணியும் இணைந்து, உலகளாவிய இசை விருந்தாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. மேலும், ரசிகர்கள் பெரிதும் விரும்பும் ஷாருக்கான் – தீபிகா படுகோன் ஜோடியை மீண்டும் திரையில் கொண்டு வருகிறது.

இந்தப் பாடல், ஷாருக்கானின் வசனத்துடன் தொடங்குகிறது. ‘நான் கொலையாளி அல்ல, காதலன்; என் இலக்கு என் காதலி. இதயத்தைத் துளைக்காதவன் என்ன காதலன்?..’ என்ற இந்த வசனம் அவரது கதாபாத்திரத்தின் தன்மையை அதிரடியாக வெளிப்படுத்துகிறது. தொடர்ந்து வரும் துள்ளலான காதல் நடனப் பாடல், பாலிவுட்டின் புகழ்பெற்ற அர்ஜித் சிங்கையும், உலகப்

புகழ்பெற்ற பாப் இசை நட்சத்திரம் எட் ஷீரனையும் ஒன்றிணைக்கிறது. மதுபந்தி பாக்ஸியின் மந்திரக் குரலும் இதில் கூடுதலாக இணைந்து பாடலை மெருகேற்றுகிறது.
இசையமைப்பாளர்கள் இசையமைப்பில், பாடலாசிரியர் குமார் பாடலை எழுத, நடன இயக்குநர்கள் பியூஷ் – ஷாஜியாவின் நடன அமைப்பில், எட் ஷீரனின் ஆங்கில மொழியிலான ராப் பாடல் வரிகளுடன் உருவாகியுள்ள ‘தூ மில் ஜாயே – பல படைப்பாற்றல் மிக்க கலைஞர்களின் சங்கமமாகத் திகழ்கிறது.

Leave A Reply

Your email address will not be published.