ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் டாக்டர் எஸ்.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் தயாரிக்கும் படம் ” குற்றம் புதிது ” அறிமுக இயக்குனர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இந்த படத்தில் காதநாயகனாக தருண், நாயகியாக செஷ்வித்தா அறிமுகமாகிறார்கள். இவர்கள் தவிர மதுசூதன் ராவ், ராமசந்திரன், பாய்ஸ் ராஜன்,பிரியதர்ஷினி, ஸ்ரீநிதி, சங்கீதா மற்றும் தினேஷ் செல்லையா,ஸ்ரீகாந்த்,மீரா ராஜ்,டார்லிங் நிவேதா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, கரண் கிருபா இசையமைக்கிறார். படத்தின் பூஜை சென்னை பிரசாத் லேபில் பூஜையுடன் தொடங்கியது. 23ம் தேதி முதல் இப்படப்பிடிப்பு ஒரேகட்டமாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.