பாதி சம்பளத்தில் நடித்த ஜீவி பிரகாஷ்: ‘பிளாக்மெயில்’ தயாரிப்பாளர் அமல்ராஜ் தகவல்

ஜேடிஎஸ் பிலிம் பேக்டரி சார்பில் அமல்ராஜ் தயாரித்துள்ள படம் பிளாக்மெயில். மு.மாறன் இயக்கி உள்ளார். ஜி.வி. பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.

இதில் தயாரிப்பாளர் அமல்ராஜ் பேசும்போது ” இந்தப் படத்தின் ஹீரோ ஜி.வி. பிரகாஷ் சாருக்கு நன்றி. படப்பிடிப்பு முடிந்து கடைசி 8 நாட்கள் மட்டும் ஷூட் முடிக்க முடியாமல் இருந்தது. அதற்கு பக்கபலமாக இருந்து உதவி செய்தவர் ஜி.வி. பிரகாஷ். படத்திற்காக அவர் பாதி சம்பளம்தான் வாங்கி இருக்கிறார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் டப்பிங் முடித்து ஆடியோ லான்ச் வரை வந்திருக்கிறார். அவருக்கு என்றுமே கடமை பட்டிருக்கிறேன்” என்றார்.

ஜிவி பிரகாஷ்குமார், பேசும்போது “மாறன் திறமையான இயக்குநர். தயாரிப்பாளராக அறிமுகமாகும் அமல்ராஜ் சாருக்கு வாழ்த்துக்கள். நல்ல கதைகள் நிச்சயம் கவனம் பெறும். அதுபோல, ‘பிளாக்மெயில்’ படமும் பேசப்படும் என நம்புகிறேன். தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இன்ஸ்டாகிராமில் தேஜூவுடன் நடனம் ஆடியிருந்தேன். வைரல் ஆனது. அங்கிருந்துதான் இந்தப் படத்திற்கு தேஜூ கதாநாயகியாக தேர்வு ஆனார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”. என்றார்.

Leave A Reply

Your email address will not be published.