டிரண்டிங்: எச்சரிக்கை மணி

இன்றைக்கு டிரண்டிங்காக இருப்பது சமூக வலைத்தளங்களும், ஆன் லைன் சூதாட்டமும்தான். இந்த இரண்டும் ஒரு குடும்பத்திற்குள் எப்படி நுழைகிறது என்பதுதான் படம்.

கதை நாயகன் கலையரசனும், நாயகி ப்ரியாலயாவும் அன்பான கணவன் மனைவி . தகுதிக்கு மீறி கடன் வாங்கியதில் இஎம்ஐ கட்ட முடியாமல் திணறுகிறார்கள். வருமானம் கொடுத்து வந்த இவர்களின் யூ டியூப்பும் முடக்கப்பட்டு விட அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போதுதான் ஒரு பிரைவேட் போன் கால் இவர்களை ஒரு விபரீத விளையாட்டுக்கு அழைத்து வாழ்க்கையிலும் விளையாடுகிறது. அந்த விளையாட்டு என்ன? தம்பதிகள் என்ன ஆனார்கள் என்பதுதான் படத்தின் கதை.

நான்கைந்து கேரக்டர்களை வைத்துக் கொண்டு ஒரு பேமிலி த்ரில்லர் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிவராஜ். கேரக்டருக்கு தேவையான அளவாக வருகிறார் நாயகன் கலையரசன். ப்ரியாலயா அழகு, நடிப்பு இரண்டிலுமே ஸ்கோர் செய்துள்ளார். குறிப்பாக எமோஷ்னல் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார். பிரேம் குமார் கிடைத்த நேரத்தில் நல்ல நடிப்பைத் தந்துவிட்டுச் செல்கிறார்.
சாம் சி.எஸ். பின்னணி இசை படத்தை விறுவிறுப்பாக நகர்த்துகிறது. ப்ரவீன் பாலு வீட்டுக்குள்ளே சுற்றும்

கதைக்கு நல்ல ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார். சமூக ஊடகங்கள், இணையதள விளையாட்டுக்குள் லாபம் தருவதை விட எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை படம் உணர்த்துகிறது. இப்படியான விளையாட்டுகள் யாரை ஈர்க்கிறது, அவர்கள் எப்படி விட்டில் பூச்சிகளாய் இதற்குள் விழுகிறார்கள் என்பதையும் சொல்கிறது.

இன்றைய இளம் தம்பதிகளுக்கு இது படமல்ல எச்சரிக்கை மணி.

Leave A Reply

Your email address will not be published.