ஹார்ட்டின்: உள்ளம் கவர் கள்வன்

காதலின் மெல்லிய உணர்வுகளை பேசும் படமாக வெளிவந்துள்ளது ஹார்ட்டின். கிஷோர் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், காதலின் அழகையும் மனித உணர்வுகளின் ஆழத்தையும் பேசுகிறது. மென்மையான படைப்பாக வெளியாகியுள்ளது.

நாயகன் சனந்தும், நாயகி யமயாவும் காதலித்து வரும்போது திடீர் விபத்து ஒன்றில் நினைவை இழ’கும் சனந்த் முன்பு பிரிந்த காதலி மடோனாவுடனான காதல் மட்டுமே நினைவிரு’கிறது. யமயாவுடனான காதலை மறந்து விடுகிறார். இந்த நிலையில் மீண்டும் சனந்த் வாழ்’கை’குள் வருகிறார் மடோனா அதன் பிறகு என்ன நட’கிறது என்பதே கதை.

காதல், புரிதல், பிரிவு, மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு போன்ற அம்சங்களை இயல்பான சொல்லியிரு’கிறார் இய’குநர். எந்தவித செயற்கையான திருப்பங்களையும் திணிக்காமல் கதையை இயல்பாக நகர்த்தியுள்ளார். முதல் பாதி முழுவதும் இனிமையான காதல் தருணங்கள் நிறைந்துள்ளன. கதாபாத்திரங்களின் உறவுகள் மெதுவாக வளர்வதை அழகாக பதிவு செய்துள்ளார். இரண்டாம் பாதியில் உணர்ச்சிப்பூர்வமான மோதல்கள் அதிகரிக்கின்றன.

சனந்த் தனது கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்துள்ளார். காதல், குழப்பம் மற்றும் உணர்ச்சி போராட்டங்களை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். மடோனா செபாஸ்டியன் வழக்கம்போல தனது அமைதியான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். கதாபாத்திரத்தின் முதிர்ச்சியையும் உணர்வுகளையும் மிக எளிதாக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கிறார். அறிமுக நடிகை யமயாவும் நம்பிக்கையூட்டும் நடிப்பை வழங்கியுள்ளார்.
இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒருவராக இருக்கிறார். இனிமையான பாடல்களும் மென்மையான பின்னணி
இசையும் காதல் காட்சிகளுக்கு உயிர் கொடுக்கின்றன.

ஒளிப்பதிவாளர் முகேஷ், ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டி பகுதிகளின் இயற்கை அழகை கண்கவர் வகையில் பதிவு செய்துள்ளார்.
மொத்தத்தில், ‘ஹார்டின்’ படத்திற்கு நம் ஹார்ட்டினை தரலாம்.

Leave A Reply

Your email address will not be published.