அங்கீகாரத்தின் வெற்றி மக்களால் சாத்தியமானது: ஹீரோ கேஜேஆர் மகிழ்ச்சி

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள படம் அங்கீகாரம். இப்படத்தை பா.ரஞ்சித்தின் முன்னாள் உதவி இயக்குநரான தென்பாதியான் இயக்கியுள்ளார். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அங்கீகாரத்திற்காக போராடும் ஒரு தடகள வீரனின் வாழ்க்கைப் பயணத்தையும், நீதிக்காக அவர் மேற்கொள்ளும் சட்டப் போராட்டத்தையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஏ.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்தப் படம் ஒரளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து படத்தில் பணியாற்றிவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது. இதில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், ஹீரோவுமான கேஜேஆர் பேசியதாவது: டிக்கெட் வாங்கி படம் பார்த்து ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி. எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த படத்தின் மூலம் ஒரு நடிகராக நிற்பதில் பெருமையாக இருக்கிறது. இந்தப்படம் பெரிய வெற்றி இல்லை, மீடியம் தான். எனக்கு தெரிந்தவர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் என் காதுபடவே வேறு கதை எடுத்திருக்கலாம் வேறு ஹீரோ நடித்திருக்கலாம் என்றார்கள்.
ஆனால் இப்போது மக்கள் வரவேற்பு தர ஆரம்பித்து இருக்கிறார்கள். இதற்கு முழு காரணம் என இயக்குநர் தென்பாதியான் தான் அவர் சொன்னதை நான் செய்தேன். தொழில்நுட்பக் குழு அத்தனை பேரும் மிகச்சிறப்பாக உழைத்திருக்கிறார்கள். இந்தப்படம் ஜெயித்தால் தான் இவர்களுக்கு வாழ்க்கை. அதனால் இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள். இந்தப்படத்தில் உழைத்த அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் எனக்காக காசு பணம் பார்க்காமல் வேலை செய்தார்கள். அவர்களுக்கு எனது நன்றி, என்றார்.

தயாரிப்பாளர் அருள் முருகன் பேசியதாவது: ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனத்தின் முதல் படம் இது. எங்களுடைய ஹீரோ கே.ஜி. சார் வந்திருக்கிறார். எங்களை நம்பி, இந்தப் படத்துக்காக இரண்டு வருடங்கள் உழைத்திருக்கிறார். நான் தயாரிப்பாளராக இருப்பதற்கு முன்பு, அவரிடம் மேனேஜராகத்தான் என்னுடைய கேரியரைத் தொடங்கினேன். இன்று இந்த மேடையில் தயாரிப்பாளராக நிற்கிறேன். அதற்கு ரொம்ப நன்றி சார்.

அடுத்து ஜே.பி. அண்ணா, அதாவது இந்தப் படத்தின் இயக்குநர். முதல் நாளிலிருந்தே இன்று வரை அவருடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அவருடைய எழுத்தையும், அவர் சொல்ல வந்த விஷயங்களையும் படமாக உருவாக்கியிருப்பது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு படத்தை நாங்கள் எடுத்திருக்கிறோம். எங்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், ஜிப்ரான் அண்ணா என ஒளிப்பதிவாளர் அனைவரும் கடுமையான உழைப்பை தந்துள்ளனர். இப்படத்தை எப்படியாவது நீங்கள் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். நன்றி.

தயாரிப்பாளர் அஜித் பாஸ்கர் பேசியதவது: முதலில் இந்தப் படத்தின் இயக்குநர் தென்பாதியான் (ஜே.பி.) அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் முக்கிய காரணமே அவர்தான். இந்தக் கதைக்காக நிறைய ஆய்வுகள் செய்தார். ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்காக பல இடங்களுக்குப் பயணம் செய்து, மிகுந்த உழைப்பைச் செலவிட்டார். அதேபோல் தயாரிப்பாளரும் எங்கள் அண்ணனுமான கே ஜெ ஆர் இந்தப் படத்திற்காக முழு ஆதரவையும் அளித்தார். இந்த மாதிரியான படத்தை உருவாக்குவதற்கு நிறைய காலமும் உழைப்பும் தேவைப்பட்டது. படப்பிடிப்பு தளத்திலும் அனைவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். தொழில்நுட்பக் குழு முழு ஆதரவு தந்ததனர்
அங்கீகாரம்” திரைப்படத்திற்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது படக்குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. இன்னும் இப்படத்திற்கு முழு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

Leave A Reply

Your email address will not be published.