இதயம் முரளி: ஒரு தலை காதலும் புனிதமானது…புனிதமானது…

‘இதயம்’ படத்தில் தன் காதலை சொல்ல முடியாமலேயே போனவர் முரளி. இப்போது அவர் மகன் அதர்வா ஒன்றுக்கு மூவரிடம் காதலை சொல்லாதவராக நடித்திருக்கும் படம் இதயம் முரளி.

பெற்றோர் இல்லாத இதயாவுக்கு (அதர்வா), அவருடைய மாமா(நட்டி)தான் உலகமே. அவரை படு சுதந்திரமாக வளர்க்கிறார் நட்டி. பள்ளிப் பருவத்தில டியூஷன், டென்னிஸ் பயிற்சி எனச் சுற்றி, சமந்தாவை (பிரீத்தி முகுந்தனை) காதலிக்கிறார் இதயா. தன் காதலை சொல்ல நினைக்கும் வேளையில் திடுக்கிடும் ஒரு நிகழ்வால் சமந்தாவிடம் தன் காதலைத் தெரிவிக்காமலே போய்விடுகிறது.

பிறகு, கல்லூரிப் பருவத்தில் சந்திக்கும் அமுதாவிடமும் (கயாடு லோஹர்) தன் காதலை வெளிப்படுத்தாமலேயே கடந்துபோகிறார். இதயா தன் காதலை சொல்ல முடியாமல் போனது ஏன்? அவருக்குள் இருக்கும் தயக்கத்திற்குக் காரணம் என்ன என்பதைச் சொல்கிறது அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனின் இந்த ‘இதயம் முரளி’.

பள்ளிப் பருவம், கல்லூரிப் பருவம், வேலைக்குச் செல்லும் இளமைப் பருவம் எனத் கதை பயணிக்கும் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் உடல்மொழியிலும் நடிப்பிலும் வேறுபாட்டினைக் கொண்டுவந்திருக்கிறார் நாயகன் அதர்வா. காதலினால் ஏற்படும் ஏக்கம், நடுக்கம், கொண்டாட்டம் என உணர்வுகளை சரியாக தந்திருக்கிறார். பகத் பாசில் படத்தை நகர்த்தி கசெல்வதோடு, அவர் வரும் இடங்களில் கலகலப்பு தூக்கலாகவே இருக்கிறது. நாயகிகளாக வரும் ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் இருவருமே நடிப்பில் குறையில்லாத பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

‘பரிதாபங்கள்’ சுதாகர் காமெடி சிரிக்க வை’கிறது. தமன், நிஹாரிகா, ‘பரிதாபங்கள்’ டிராவிட், ரக்ஷன், ஏஞ்சலின், நட்டி எனப் பெரும் பட்டாளம் இதயாவின் காதலுக்கு கைகொடுக்க வருகிறது. கலகலப்பையும் தருகிறது.

திருச்சியின் பானி பூரி கடை நியூயார்க்கின் புரூக்ளின் பாலம் என ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் பரமஹம்சா மற்றும் சி.எச். சாய். கேமராவை காதலித்திருக்கிறார்கள். பாடல்களில் ‘கட்டழகி’, ‘வாமா வாமா’, ‘தங்கமே தங்கமே’, ‘இதயா’ என தமனின் பாடல்கள் தியேட்டர்களில் அதிரடி கொண்டாட்டம்,
ஒருவருடைய வாழ்க்கையின் வெவ்வேறு பருவங்களில் பூக்கும் ஒருதலை காதலை பேசி இருக்கிறார். ஆகாஷ் பாஸ்கரன். 1980களின் முரளி இதயத்தை கொள்ளை அடித்தார். 2026ல் அதர்வா இதயத்தை திருடியிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.