சிவகார்த்திகேயனுக்கு பிடித்த ‘ஹவுஸ் மேட்ஸ்’

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்க .ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

படத்தின் அறிமுக விழா நடந்தது இதில், இயக்குநர் ராஜவேல் பேசும்போது ” இந்த படம் சாதாரணமாக தான் ஆரம்பித்தது. ஆனால், இவ்வளவு பெரிய மேடை இந்த படத்திற்கு அமைந்தது சிவகார்த்திகேயன் புரொடக்ஷன் தான். முதல் படம் எடுப்பது சவாலான விஷயம். எடுத்த படத்தை வெளியிடுவது இன்னும் சவாலானது. அதை ஷிரி புரொடக்க்ஷன் எளிமையாக செய்து கொடுத்தது. சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி.

இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். நான் கஷ்டப்பட்ட சமயத்தில் கூட இருந்த விஜய்க்கு நன்றி. தர்ஷன், காளி வெங்கட், வினோதினி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தில் நிறைய சின்ன சின்ன சர்ப்ரைஸ் இருக்கிறது. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”. என்றார்.
நடிகர் தர்ஷன், பேசும்போது “இதுபோன்ற கதையில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தில் அமைந்திருக்கிறது. என்னை நம்பி இந்த கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. படக்குழுவினர் அனைவரும் கடினமாக உழைத்துள்ளனர். படத்தின் ஐடியா, திரைக்கதை இதெல்லாம் சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கு மிகவும் பிடித்தது. படத்தை பிரசண்ட் செய்ய ஒத்துக்கொண்டதற்கு அண்ணாவுக்கு நன்றி.

டிரெய்லர் பார்த்துவிட்டு நிறைய பேர் ஹாரர் படமா என்று கேட்டார்கள். அதையும் தாண்டி என்கேஜிங்கான திரைக்கதையும் ஆச்சரியங்களும் கொண்ட ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படம் இது. காளி வெங்கட் அண்ணாவுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை கொடுங்கள்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.