ஆல்டர் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் ஃபரீத் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘சொட்ட சொட்ட நனையுது’ . நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி, பிரியங்கா நாயர், ரோபோ சங்கர், கல்லூரி வினோத், ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரெஞ்சித் உன்னி இசை அமைத்துள்ளார், ரயீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வருகிற 22ம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் நடிகர் நிஷாந்த் ரூஷோ பேசியதாவது:எனது ஐந்தாவது படம். இந்தக்கதையைக் கேட்டவுடன் சொட்டையை வைத்து ஒரு கதை, எப்படி அந்த வலியைச் சொல்ல முடியும் என்று தோன்றியது.
இயக்குநர் நவீத் நிஜ வாழ்க்கையில் சொட்டையாய் இருப்பவர்களைப் பார்க்கச் சொன்னார். என் உறவுகளில் அப்படி சிலரைச் சந்தித்தபோது தான் அவர்களது வலி புரிந்தது. அப்போது தான் கதையின் வலிமை புரிந்தது. சொட்டை என்பது இயற்கை தான் ஆனால் அதைக் குறையாகச் சொல்லி, இப்போது அது அவர்களது வாழ்க்கையையே பாதிக்கிறது. எங்கள் படம் பார்த்தால், சொட்டைத்தலையை இனிமேல் யாரும் மோசமாக நடத்த மாட்டார்கள். இப்படம் உங்கள் மனதை மாற்றும். என்றார்.
.