வசூலை குவிக்கும் ‘மீஷா’

எம்.சி.ஜோசப் எழுதி இயக்கியுள்ள மலையாள சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான மீஷா தமிழிலும் வெளியாகி உள்ளது. கேரளா மற்றும் தமிழ்நாடு சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

‘பரியேறும் பெருமாள்’, ‘சுழல்: தி வோர்டெக்ஸ்’ மற்றும் ‘விக்ரம் வேதா’ ஆகிய படங்களில் நடித்த கதிர். ‘மீஷா’ படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகி உள்ளார்.
யூனிகார்ன் மூவீஸ் பேனரின் கீழ் சஜீர் கஃபூர் தயாரித்த இந்த படத்தில் ஷைன் டாம் சாக்கோ ,ஹக்கிம் ஷா, ஜியோ பேபி, ஸ்ரீகாந்த் முரளி, சுதி கோபா, உன்னி லாலு மற்றும் ஹஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அடர்ந்த காட்டின் நடுங்கும் அமைதியில் சிக்கி கொள்ளும் நண்பர்கள் குழுவைச் சுற்றி நடக்கும் தொடர்ச்சியான நிகழ்வுகளை கொண்டு படம் உருவாகி உள்ளது. இந்த படம் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மலையாளத்தில் வசூலை குவித்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.