போகி: கொழுத்த வேண்டியதை வெளிச்சம்போட்டு காட்டுகிறது

மலைவாழ் மக்கள் படும் இன்னல்களை மையமாக வைத்து சமீபகாலமாக நிறைய படங்கள் வந்திருக்கிறது. அந்த வரிசையில் வந்துள்ள படம் இது.

‘சென்ட்ரல் ஸ்டேஷன்’ என்கிற மலைப் பகுதியில் பெற்றோர் இல்லாத நிலையில் தங்கை சுவாசிகாவைக் கண்ணும் கருத்துமாக வளர்க்கிறார் அண்ணன் அபிநந்தி. பள்ளி மேல்நிலைத் தேர்வில் சுவாசிகா மாநிலத்திலேயே முதலாவது மாணவியாக வெற்றி பெற மருத்துவ வசதி இல்லாத தன் கிராமத்துக்கு அதைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் பட்டணத்துக்கு சென்று மருத்துவம் படிக்கிறார் சுவாசிகா.

ஆனால் மருத்துவக் கல்லூரியில் நடக்கும் ஒரு சம்பவம் இவர்கள் அத்தனை பேரின் வாழ்வையும் புரட்டிப் போடுகிறது. அது என்னஞ் அவற்றின் முடிவு என்ன என்பதுதான் மீதிக் கதை. இதற்கு ஊடாக அபிநந்தி, பூனம் கவுர் காதலும் சொல்லப்படுகிறது.

ஒரு கிராமத்து மனிதனாகவே நபி நந்தி வாழ்ந்திருக்கிறார். தங்கை மீதான பாசத்தில் கலங்க வைக்கிறார். தீமை கண்டு பொங்கும்போது தீப்பொறியும் பறக்கிறது. சுவாசிகா இந்தப் படத்தின் பெரிய பலம், கூடுதல் இளமையாகவும் இருக்கிறார். கிராமத்தில் சாமி வந்ததாக நம்ப வைத்து குடிகாரனை திருத்துவதில் தொடங்கி, படிக்கும் கல்லூரியில் அநீதி கண்டு பொங்கி வில்லனின் கொடுமைக்கு இலக்காவது வரை சுவாசிகாவின் ராஜ்ஜியம்தான்.

காமெடியனாக மாறிவிட்ட நான் கடவுள் ராஜேந்திரன் இதில் கொடூரன வில்லனாக மிரட்டுகிறார். சுவாசிகாவை மணக்க விரும்பி வித்தியாசமாக அதை செயல்படுத்தும் சரத், சுவாசிகாவுக்கான நீதிக்காக நபி நந்தியுடன் கைகோர்ப்பது படத்தின் டுவிஸ்ட்

இன்ஸ்பெக்டராக வேல ராமமூர்த்தி, பள்ளித் தலைமை ஆசிரியராக சங்கிலி முருகன், காதலியாக பூனம் கவுர், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் தங்கள் இருப்பை பதிவு செய்துவிட்டுப் போகிறார்கள்.

மலையின் அழகையும், நகரத்தின் கொடூரத்தையும் பதவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜா. கொடூரமான நாட்டு நடப்புகளை அப்படியே சினிமாவாக்கி இருக்கிறார். இயக்குனர் விஜய் சேகரன் .

Leave A Reply

Your email address will not be published.