சென்னை பைல்ஸ் முதல் பக்கம்: இரண்டாம் பக்கத்திற்கு வெயிட்டிங்

புகழ்பெற்ற கிரைம் நாவலாசிரியரின் மகனான வெற்றி, தனது தந்தையின் வாழ்க்கையை எழுதும் பத்திரிகையாளர் ஷில்பா மஞ்சுநாத்துக்கு உதவ சென்னை வருகிறார். தந்தையை போல அவர் எழுத்தாளராக இல்லாவிட்டாலும் குற்ற செயல்களின் பின்னணியை கண்டுபிடிப்பதில் திறமையாளராக இருக்கிறார்.

இவர் சென்னை வந்த நேரத்தில் தமிழகத்தினுடைய வெவ்வேறு பகுதிகளில் பள்ளியில் பயிலும் மாணவர்களும் மாணவிகளும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இதை கண்டுபிடிப்பதற்காக இன்ஸ்பெக்டர், தம்பி ராமையா தலைமையில் ஒரு குழு ஏற்பாடு செய்கிறார்கள். அவருக்கு உதவியாக ஹீரோ வெற்றி செல்கிறார்.
வெற்றியின் உதவியுடன் சைக்கோ கொலைகாரனை தம்பி ராமய்யா கண்டுபிடித்தாரா என்பது மீதி கதை.

இதற்கிடையில் ராமையாவின் மகள் எதிர்பாராத விதமாக தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் ராமையா ரொம்பவே மனமடைந்து விடுகிறார். அந்த தற்கொலைக்கான காரணத்தை வெற்றியிடம் தம்பி ராமையா சொல்கிறார். அதற்குப்பின் குற்றவாளிகளை வெற்றி கண்டுபிடிக்கிறார். குற்றவாளிக்கு ராமையா தண்டனை வாங்கி தந்தாரா? இல்லையா? எதற்காக இந்த குற்றங்களை செய்கிறார்கள்? இதற்குப் பின்னணி என்ன? என்பதுதான் படத்தினுடைய மீதி கதை.

ஹீரோ வெற்றி நடிப்பு அசத்தல். அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். வில்லனாக வரும் தயாரிப்பாளர் மகேஸ் சிக்ஸ் பேக் காட்டி பயமுறுத்துகிறார். படத்தில் ஒவ்வொரு நடிகர்களுமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஹீரோயினி ஷில்பா மஞ்சுநாத் பத்திரிக்கையாளராக கச்சிதமாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

இரண்டு மணி நேர பரபரப்பான படத்தை தந்திருக்கிறார், அனீஷ் அஷ்ரப். சென்னை பைல்சின் இரண்டாவது பக்கத்திற்காக வெயிட்டிங்.

Leave A Reply

Your email address will not be published.