காத்து வாக்குல ஒரு காதல்: ஆக்ஷன் களத்தில் ஆழமான காதல்

வடசென்னை இளைஞர்களுக்காக உழைத்து வருகிறவர் ஜீவா. அதே பகுதியை சேர்ந்த மேகாவை காதலிக்கிறார். அந்த பகுதியை சேர்ந்த வில்லன் ரத்னா இளைஞர்கள் கையில் கத்தியை கொடுத்து ரவுடிகளாக மாற்றுகிறார். இதனால் ஜீவா ரத்னாவை எதிர்த்து போராடுகிறார். அவரும் மாஸ் என்ற பெயரில் எதிர் தாதாவாகிறார். இதனால் மேகாவின் காதலை இழக்கிறார். பின்னர் இவர்கள் இருவரும் எப்படி இணைகிறார்கள் என்பது மீதி கதை.

படத்தின் முக்கிய அம்சம் சண்டை இயக்குனர் சூப்பர் சுப்பராயன். வில்லனாக நடித்திருப்பதோடு சண்டை காட்சிகளையும் அற்புதமாக அமைத்திருக்கிறார். ரத்னாவாக சாய் தீனா கலக்கியுள்ளார். அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் கல்லூரி வினோத் நடித்திருக்கிறார்.

மேகாவாக லட்சுமி பிரியா நடித்துள்ளார். மஞ்சு எனும் பாத்திரத்தில், இரண்டாவது கதாநாயகியாகப் பல்லவி நடித்துள்ளார். இருவருமே தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஜீவாவாக மாஸ் ரவி நடித்துள்ளார். படத்தின் நாயகனான இவர்தான் படத்தின் இயக்குநரும். நடிப்பு, சண்டை இரண்டிலும் மாஸ் காட்டி உள்ளார். படத்தில் வரும் காதலும், அந்த காதலின் ஆழமும் புதிதாக இருக்கிறது.

லவ் அண்ட் ஆக்ஷன் பிரியர்களுக்கு படமும் பிடிக்கும்.

Leave A Reply

Your email address will not be published.