‘குற்றம் புதிது’ சீட்டின் நுனியில் அமர வைக்கும் படம்

ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். உத்ரா புரொடக்சன்ஸ் சார்பாக ஹரி உத்ரா இந்தப் படத்தை ஆகஸ்ட் 29 அன்று வெளியிடுகிறார்.

இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விந்£வில் தயாரிப்பாளர், நடிகர் தருண் விஜய் பேசியதாவது: இது என்னுடைய முதல் படம். என்னுடைய அம்மா, அப்பா ஆதரவு இல்லாமல் நான் ஹீரோவாக முடியாது. அவர்களுக்கு நன்றி. இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் என்னுடைய முதல் படத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரம் கொடுத்துள்ளார்.

பொறுமையாக தொடங்கும் படம் போகப்போக ஆடியன்ஸை சீட்டின் நுனியில் அமர வைக்கும். கதிரேசன் என்ற புட் டெலிவரி பையனாக நடித்திருக்கிறேன். உடன் நடித்தவர்கள் எல்லோரும் அனுபவசாலிகள் என்பதால் கொஞ்சம் பதட்டம் இருந்தது. ஆனால், எல்லோரும் ஆதரவு கொடுத்தார்கள். கண்டிப்பாக மீடியாவும் பார்வையாளர்களும் எங்கள் படத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

சினிமாவில் நடிப்பதற்காக நடனம், சண்டை உள்ளிட்ட பல பயிற்சிகளை எடுத்திருந்தாலும், இந்த படத்தின் கேரக்டருக்காக 3 மாதங்கள் வரை தனியாக பயிற்சி எடுத்தேன். அது படப்பிடில் எளிதாக நடிக்க உதவியாக இருந்தது” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.