ரைட்: ஒரு காவல் நிலையத்தின் ஒரு நாள் பரபரப்பு

அந்த காவல் நிலையத்திற்கு தன் மகனை காணவில்லை கண்டுபிடித்து தாருங்கள் என்று நுழைகிறார் அருண் பாண்டியன். அவர் முன்னாள் ராணுவ வெடிகுண்டு நிபுணர். அந்த காவல் நிலையத்திற்கு திருமண பத்திரிகை கொடுக்க வருகிறார் நாயகியும் அதே காவல் நிலையத்தின் சப் இன்ஸ்பெக்டருமான அக்ஷரா ரெட்டி. இரண்டு திருடர்கள் லாக்அப்பில் இருக்கிறார்கள். பெரும்பலான போலீசார் முதல்வர் பாதுகாப்புக்கு சென்றுவிட ஒரு சில போலீசாரே இருக்கிறார்கள்.

இந்த நிலையில் காவல் நிலையத்திற்கு வந்து சேரும் ஒரு திருட்டு லேப் டாப் மூலம் ஒருவன் பேசுகிறான். காவல் நிலையம் முழுக்க வெடிகுண்டு வைத்திருக்கிறேன். நான் சொன்னபடி கேட்காவிட்டால் காவல் நிலையத்தை தகர்ப்பேன் என்கிறான். முடிந்து போன ஒரு வழக்கை விசாரித்து உண்மையான குற்றவாளிக்கு போலீஸ் நிலையத்திலேயே கோர்ட் அமைத்து தீர்ப்பு தர வேண்டும் என்கிறான். அது என்ன வழக்கு, குண்டு வைத்தவன் யார் என்பதுதான் படத்தின் கதை.

ஒரு நாள் ஒரு போலீஸ் நிலையத்தில் நடக்கும் த்ரில் அனுபவம்தான் படம். போலீஸ் நிலையத்திற்கு வெளியே நடக்கும் ஒரு குற்றம், பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு குற்றம் இரண்டையும் ஒரே நேர் கோட்டில் பொருத்தி பரபரப்பாக கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுப்ரமணியம் ராஜேஷ் குமார்.

படத்தின் முக்கிய கேரக்டரே நாயகி அக்ஷரா ரெட்டிதான் வரும் பிரச்சினைகளை டீல் செய்வது அவர்தான். மகனை காணவில்லை என புகார் கொடுக்க வரும் நடுத்தர வயது தந்தையாக அருண் பாண்டியன் ரொம்பவே பொறுமையாக நடித்திருக்கிறார். இடைவேளைக்கு பிறகுதான் நட்டிக்கு வேலை சிறப்பாக செய்திருக்கிறார். சீரியசான கதையில் சிரிக்க வைக்கிறார் தங்கதுரை.

பரபர திரைக்கதையால் ராக்கெட் வேத்தில் பறக்கிறது படம்.

Leave A Reply

Your email address will not be published.