டியூட்: தியேட்டருக்குள் தீபாவளி

‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக வெற்றி பெற்ற பிரதீப் ரங்கநாதன், ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களின் மூலம் நடிகராகவும் வெற்றி பெற்றார். தற்போது ‘டியூட்’ படம் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளார்.

நண்பர்களுடன் சேர்ந்து ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் நடத்துகிறார், பிரதீப் ரங்கநாதன். அவரது தாய்மாமன் சத்யராஜின் மகள் மமிதா பைஜு அவரை காதலிக்கிறார். ஆனால் அந்த காதலை பிரதீப் ஏற்க மறுக்கிறார். இதனால் கோபித்துக் கொண்டு வெளியூர் செல்லும் மமிதா அங்கு இன்னª£ரு இளைஞனை காதலிக்கிறார். பிரிந்த பிறகுதான் காதலின் அருமையை உணர்கிறார் பிரதீப். தன் காதலை

தாய்மாமனிடம் சொல்ல அவர் திருமணமும் செய்து வைத்து விடுகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
இன்றைய இளம் தலைமுறையினரின் பல்ஸை சரியாக பிடித்து, அதை அவர்களுக்கானதாக மட்டுமின்றி எல்லா தரப்பினரும் ரசிக்கும் வகையில் கொடுத்திருக்கிறார் இளம் இயக்குனர் கீர்த்தீஸ்வரன். நம்பிக்கையான புது வரவு.

படம் தொடங்கும்போதே ரகளையாகத்தான் தொடங்குகிறது. முன்னாள் காதலியின் திருமணத்துக்கு வரும் பிரதீப் செய்யும் அலப்பறைகள் தியேட்டரையே அலற வைக்கிறது. ஜாலியான கதையாக இருந்தாலும் இந்த 2025 காலகட்டத்திலும் சாதி எப்படி தன் கோர முகத்தை காட்டுகிறது என்பதை எந்தவித பிரச்சார நெடியும் இல்லாமல் நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி சொல்லியிருக்கும், இயக்குனரின் சமூக அக்கறைக்கு ஒரு ராயல் சல்யூட்.

பிரதீப் ரங்கநாதனின் மேனரிசத்துக்கே தனி ரசிகர் கூட்டம் உருவாகி இருக்கிறது. அதை இந்தப் படத்திலும் தக்கவைத்திருக்கிறார். அவர் பேசும் ஒன் லைன் கவுண்டர்களுக்கு தியேட்டரே அல்லோக படுகிறது. அவருடைய நடிப்பு, எமோஷனல் காட்சிகளிலும் மிளிர்கிறது.
மமிதா பைஜுவுக்கும் கனமான கதாபாத்திரம், அதை அவரும் உணர்ந்து திறம்பட செய்திருக்கிறார். முன் பாகத்தில் கலகலப்பாக வருகிறவர், பின் பாகத்தில் கதையின் சீரியசை உணர்ந்து நடித்திருக்கிறார்.

படத்தின் மற்றொரு ஹீரோ சரத்குமார் என்று சொல்லும் அளவுக்கு, தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும், ரசிக்க வைக்கிறார். பரிதாபங்கள் திராவிட் செல்வம், ரோஹினி, ஹீரோயினின் காதலராக வருபவர் என அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

சாய் அபயங்கரின் இசையில் ‘ஊரும் ப்ளட்’ ஏற்கெனவே ஹிட். மற்ற பாடல்கள் முனுமுனுக்க வைக்கிறது. பின்னணி இசை மூலமும் படத்துக்கு வலு சேர்த்துள்ளார். நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு கலர்புல் மாயாஜாலம் காட்டுகிறது.

தீபாவளி போனசிலிருந்து உருப்படியாக செலவு செய்ய வேண்டுமனால் ‘டியூட்’ போகலாம். காமெடி சரவெடியும், காதல் பட்டாசும் தியேட்டரை தீபாவளியாக்குகிறது.

Leave A Reply

Your email address will not be published.