ராம் அப்துல்லா ஆண்டனி: பெரியவர்களுக்கு சிறுவர்கள் நடத்தும் பாடம்

கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்த ஆண்டனி (பூவையார்), இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த அப்துல்லா (அர்ஜுன்) இந்து குடும்பத்தை சேர்ந்தவர் ராம் (அஜய்) மூவருமே பள்ளித் தோழர்கள்.

மூவரும் சேர்ந்து அமைச்சர் வேல ராமமூர்த்தியின் பேரனை கடத்தி கொடூரமாக கொலை செய்கிறார்கள். கொலையாளிகளை தேடி வருகிறார் டெரர் போலீஸ் ஆபீசர் தீனா. சிறுவர்கள் அப்படிச் செய்திருக்க மாட்டார்கள் என்று அவர்களுக்கு உதவ வருகிறார், புதிதாக போலீசில் சேர்ந்துள்ள சவுந்தர்ராஜா. இவர்களுக்கு இடையிலான ஆடுபுலி ஆட்டம்தான் கதை. சிறுவர்கள் கொலை செய்தார்களா? கொலைக்கான காரணம் என்ன? என்பதுதான் படத்தின் முடிவு.

பள்ளி மாணவர்கள் பின்னணி நடக்கும் ஒரு கொலையை தான் இயக்குனர் ஜெயவேல் சமூக விழிப்புணர்வுடன் சொல்ல முயற்சித்து இருக்கிறார். பள்ளி மாணவர்களாக பூவையார், அஜய், அர்ஜுன் வருகிறார்கள். இவர்கள் மூவரின் நடிப்பும் இயல்பாக இருக்கிறது. அதிலும் பூவையார் டான்ஸ், எமோஷனல் நடிப்பெல்லாம் அட்டகாசமாக இருக்கிறது. இவர்களுடைய பெற்றோர்களாக ஜாவா சுந்தரேசன், வினோதினி, தலைவாசல் விஜய், கிச்சா ரவி ஆகியோர் தங்கள் நடிப்பை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்கள்.

போலீசாக சௌந்தரராஜன் வரும் காட்சிகள் இயல்பாக இருக்கிறது. இது அவருக்கு முக்கியமான படம். முதல் பாதி கொலை, போலீஸ் விசாரணை என்று செல்கிறது. இரண்டாம் பாதியில் கொலைக்கான காரணமும் அதை சுற்றியும் கதை நகர்கிறது.

படம் க்ரைம் திரில்லர் பாணியில் சென்றாலும் போதை மருந்து பழக்கத்திற்கு எதிராக, புகை பழக்கத்திற்கு எதிராக வலுவான கருத்தை முன் வைக்கிறது படம்.

Leave A Reply

Your email address will not be published.