2022ம் வெளிவந்த அதிரடி ஆக்ஷன் படமான Sisu உலகையே திரும்பி பார்க்க வைத்தது.
இரண்டாம் உலக போரின் இறுதியில், போரின் பின்விளைவுகளால் தன குடும்பத்தினர் அனைவரையும் இழந்து தனியாக வசித்து வந்த ஒரு போர் வீரனுக்கு , கிடைத்த தங்க புதையலை எடுத்துக்கொண்டு அவன் வீடு திரும்பும்போது அவனுக்கு ஏற்பட்ட அனுபவங்களை சொன்னது அந்தப் படம்.
நடைபெற்ற போரில் தான் வாழ்ந்து வந்த வீட்டை இழந்த அந்த ராணுவ வீரர், தன் குடும்பத்தினர் நினைவாக அந்த வீட்டின் மரக்கட்டைகளை எடுத்துக்கொண்டு புதிய இடத்தில், புதிய வீடு ஒன்றைக் கட்ட திட்டமிடுகிறார். அதை தடுக்க நினைக்கும் ரஷிய படைகள் இடமிருந்து தப்பித்து எப்படி தனது வீட்டை கட்டுகிறார் என்பது இந்த பாகத்தின் கதை.
முதல் பாகத்தை இயக்கிய
Jelmari Helander இந்து பாதத்தையும் இயக்கியுள்ளார் .
முதல் பாகத்தைப் போன்றே நாயகன்
Jorma Tommila ஆக்ஷனில் அதகள கபடி ஆடியிருக்கிறார்.
Stephen Lang, Richard Brake வி ல்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்கள்.
Mika Orasmaa ஒளிப்பதிவு படத்தை தாங்கிப் பிடிக்கிறது.
படத்தின் இரண்டாம் பகுதியில் சில லாஜிக் மீறல்களும், அதீத கற்பனைகளும் இருந்தாலும் விறுவிறுப்பில் முதல் பாகத்தை விட இந்தப் படம் உயர்தே நிற்கிறது. ஆக்ஷன் ரசிகர்களுக்கு செம விருந்து.