ரிவால்வார் ரீட்டா: ஸ்டைலிஷ் தமிழச்சி

தாய் செல்லம்மா (ராதிகா சரத்குமார்) மற்றும்இரு சகோதரிகளுடன் வாழ்ந்து வரும் மிடில் கிளாஸ் பெண் கீர்த்தி சுரேஷ். ஒரு உணவகத்தில் பணியாற்றி வருகிறார்.

அவரின் சகோதரியின் குழந்தையின் முதல் பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கும்போது, பாலியல் தொழிலாளியின் வீட்டிற்குச் செல்லும் தாதா டிராகுலா பாண்டியன் (சூப்பர் சுப்பராயன்),போதையில் வழிமாறி இவர்கள் வீட்டிற்குள் நுழைந்து விடுகிறான்.

இந்தப் பதற்றமான சூழ்நிலையில் நடக்கும் அடித்தடியில் தாதா பலியாகிறான். இதே நேரத்தில் ஓர் உள்ளூர் கூலிப்படை, மற்றொரு ஆந்திர தாதாவுக்கு அன்றைய நாளில் பாண்டியனின் தலையை வெட்டித் தருவதாகச் சொல்லியிருக்கிறது.

அதேபோல பாண்டியனின் மகன் டிராகுலா பாபி தந்தையைக் காணவில்லை என்று தேடுகிறான். மேலும் உள்ளூர் காவல்துறை ஆய்வாளரிடமும் கீர்த்தி சுரேஷ்க்கு முன்பகை இருக்கிறது. இத்தனைக்கும் மத்தியில் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை.

குடும்ப குடும்ப கதிவுடன் தாதாக்களின் வில்லத்தனத்தையும் இணைத்து ஒரு முழுமையான காமெடி படத்தை தந்திருக்கிறார்கள். எந்த உணர்வுகளையும் திணிக்காமல், இயல்பான டார்க் காமெடியில் கலங்கடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

செல்லம்மாவாக ராதிகா சரத்குமார் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். ‘சுடுங்க மாப்பிள்ளை’ என்று கத்தும் காட்சியில் சிரிப்பலைகள் ஆர்ப்பரிக்கிறது.

சுனில் வருகின்ற காட்சிகளில் எல்லாம் மாஸ். டிராகுலா பாபியாக மிரட்டுகிறார். செல்லம்மாவாக ராதிகா சரத்குமார் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். ‘சுடுங்க மாப்பிள்ளை’ என்று கத்தும் காட்சியில் தியேட்டரும் சேர்ந்தே சிரிப்பலைகளில் ஆர்ப்பரிக்கிறது.

வித்தியாசமான வாய்ஸ் மாடுலேஷனில் ஜான் விஜய், ரெடின் கிங்ஸிலி காமெடியில் தியேட்டரில் கலகலப்பு. அஜய் கோஷ், அலப்பறை கோஷ்.

இவர்கள் தவிர சென்ட்ராயன், அகஸ்டின் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

காட்சிக் கோணங்களின், மூலம் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரீட்டாவிற்கு உதவி இருக்கிறது.

ஒரு எதிர்பார்க்கும் கொலை, எதிர்பாராத நிகழ்வு ஆகியவற்றை வைத்து டார்க் காமெடி ஸ்டைலோடு என்ட்ரி கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜே.கே.சந்துரு. அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

ரிவால்வார் ரீட்டா: ஸ்டைலிஷ் தமிழச்சி.

Leave A Reply

Your email address will not be published.