ரேகை: 6 எபிசோடும் 6 திரைப்படம்

குற்றாலம் அருகே உள்ள பகுதியில் காவல் அதிகாரியாக இருக்கிறார் வெற்றி (பாலஹாசன்). அங்கு ஒரு விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார் வெற்றியின் உடன்பிறவா சகோதரன்.

அவரின் மரணத்திற்கான காரணத்தைத் தேட களத்தில் இறங்கும் வெற்றி, மர்மமான விஷயங்களுக்குப் பின்னாலிருக்கும் முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கிறார். விடுதியிலிருந்த அந்த இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதையும் கண்டுபிடிக்கிறார். அத்தோடு இறந்துபோன இளைஞரின் கைரேகையுடன், அதே சமயத்தில் இறந்துபோன வேறு மூவரின் கைரேகையும் ஒத்துப்போகிறது.

இந்த நால்வருக்கும் என்ன தொடர்பு, இந்த நால்வரையும் கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தார்கள் என்பதை 6 எபிசோடுகளில் சொல்கிறது இந்த ‘ரேகை’ சீரிஸ்.

கதையின் நாயகனாக பாலஹாசன் மிடுக்கான போலீஸ் உடை, அக்கதாபாத்திரத்திற்குத் தேவைப்படும் நிமிர்ந்த நடை எனக் கச்சிதமான காவல் அதிகாரியாகவே மாறிஇருக்கிறார். ஆக்ஷன், சென்டிமென்ட் என இரண்டிலும் ஸ்கோர் செய்து ஹீரோவாகவும் தடம் பதிக்கிறார்.

நாயகி பவித்ராவும் நடிப்பில் தடம் பதிக்கிறார். வில்லியாக அஞ்சலி ராவ் மூன்று வில்லன் கதாபாத்திரங்களுக்கு இடையில் தன்னுடைய கதாபாத்திரத்தை ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார்

நல்லதொரு காட்சி அனுபவத்தை தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேந்திரன் எம்.ஹென்றி. இன்ட்ரோ காணொளியின் பின்னணி இசையில் த்ரில்லூட்டும் இசையமைப்பாளர் ஆர்.எஸ். ராஜ்பிரதாப், பின்னணி இசையிலும் கோர் செய்கிறார்.

நாயகன் வெற்றியின் கதை, அவருக்கு நெருக்கமான இளைஞரின் மரணம், அதற்குப் பின்னாலிருக்கும் காரணங்கள் போன்றவற்றை நான்-லீனியர் வடிவத் திரைக்கதையாகக் கோத்திருக்கிறார் இயக்குநர் தினகரன்.

ரேகை: 6 திரைப்பட அனுபவத்தை தருகிறது

Leave A Reply

Your email address will not be published.