மேட் இன் கொரியா: ஜாலி டிரிப்

ஊட்டி அருகே உள்ள கிராமம் ஒன்றில் செண்பாவுக்கு (பிரியங்கா மோகன்). எப்படியேனும் கொரியாவுக்குச் சென்றுவர வேண்டும் என்ற ஆசை. இடையே அதே ஊரில் வசிக்கும் மணிகண்டன் (ரிஷிகாந்த்) மீது காதலும் மலர்கிறது. காதலுக்கு செண்பாவின் அப்பா எதிர்ப்பு தெரிவிக்க, மணிகண்டனுடன் கொரியா செல்கிறார். செண்பா. அதன் பின்னர் காதலன் செய்யும் துரோகத்தால் கொரியாகவில் தனித்து விடப்படும் செம்பா அங்கு என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

முழு படத்தையும் தாங்கி பிடிக்கிறார் பிரியங்கா மோகன், காமெடி, எமோஷன் காட்சிகளை எளிதா கடந்து செல்கிறார். அப்பாவாக திருநாவுக்கரசு, காதலனாக ரிஷிகாந்த், ஆங்காங்கே தலைகாட்டும் ஜென்சன் திவாகர் உள்ளிட்டவர்கள் கதைக்கு தேவையானதை செய்திருக்கிறார்கள்.
கொரிய நடிகர்களில் பாட்டியாக அலப்பறை கொடுக்கும் ‘ஸ்குவிட் கேம்’ புகழ் பார்க் ஹை-ஜின் செண்பாவின் பயணத்தில் உடன் சி-ஹுன் பேக் ஆகியோர் குறிப்பிடத்தகுந்த பங்காற்றியுள்ளனர்.

நீலகிரியின் லவ்டேலின் பசுமையையும், தென் கொரியாவின் சியோல் நகரின் வெளிச்சமிகு இரவுகளையும் குறைவில்லாமல் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறது பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு. ஹிசம் அப்துல் வஹாப், சைமன் கே. கிங், தரண் குமார் என மூன்று இசையமைப்பாளர்கள். பின்னணி இசை தரண் குமாரின் பங்களிப்பு எமோஷன் காட்சிகளுக்கு உதவியிருக்கிறது.

இந்தியாவில் இளைஞர்களிடையே பரவிவரும் கொரிய மோகம், அதன் இசை, படங்கள் மற்றும் தொடர்களைக் கொண்டாடும் கலாசார நகர்வு என்பதனை அடிப்படையாக வைத்து ஒரு ஃபீல் குட் டிராமாவைத் தந்திருக்கிறார் இயக்குநர் ரா.கார்த்திக்.

Leave A Reply

Your email address will not be published.