ஹேப்பி ராஜ்: ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி

இசை அமைப்பாளராக தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் ஜி.வி.பிரகாசுக்கு ஒரு நடிகராக குறிப்பிட்டுச் சொல்லும்படியான வெற்றி அமையவில்லை, அவரது நீண்டகால போராட்டத்திற்கு பிறகு அப்படியான ஒரு வெற்றியை சாத்தியப்படுத்தியிருக்கிறார் ஹேப்பி ராஜ். அறிமுக இயக்குனர் மரிய ராஜா இளஞ்செழியன் அதை சாத்தியப்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

ஊனமுற்ற ஒரு வம்சத்தில் பிறந்த ஜார்ஜ் மரியான் ஊனமில்லை என்றாலும் அழகு குறைந்தவர். தனது உழைப்பால் உயர்ந்த அவரை ‘குதிரை முட்டை’ வாத்தியார் என ஊரே கேலி செய்ய அவருக்கு பிறக்கும் அழகான குழந்தைக்கு ஹாப்பி என்கிற ஆனந்த் ராஜ் (T.M.Hóè£û) என பெயர் வைத்து வளர்க்கிறார்.

ஆனால், தந்தையை குதிரை முட்டை என கிண்டல் செய்த ஊர் மக்கள் ஹாப்பி ராஜையும் சின்ன குதிரை முட்டை என கலாய்க்க ஆரம்பிக்கின்றனர். இதனால், அவருக்கு அந்த ஊரில் காதல் கூட செட்டாகவில்லை. வருகிற காதல் எல்லாம் அப்பாவை சுட்டிக்காட்டியே பிரேக் அப் ஆகிறது.

இதனால் பெங்களூருவுக்கு ஒரு ஐடி கம்பெனியில் வேலைக்குச் செல்லும் ஹாப்பி அங்கே ஹீரோயின் ஸ்ரீகெளரி ப்ரியாவை சந்திக்கிறார். இருவருக்கும் காதல் மலர அங்கேயும் அவரது காதலுக்கு அப்பாவின் உருவமே பிரச்சினையாகிறது. கடைசியில் காதல் வென்றதா? என்பதே படத்தின் கதை.

ஜி.வி. பிரகாஷ் ஹாப்பி ராஜாகவே மாறி இருக்கிறார். தந்தை மீது அன்பிருந்தாலும் அவரது உருவத்தின் மீது வெறுப்பு, ஊரார்கள் மீது பயம், காதல் மீது நம்பிக்கை, யார் பக்கம் நிற்பது என்கிற தவிப்பு என படம் முழுக்க பலவித உணர்வுகளுக்°ம் உயிரூட்டி இருக்கிறார். கதை பெங்களூர் சென்றதும் யூத் மோடுக்° சென்று பின்பு சோக மோடுக்கு திருப்புகிறது. என்றாலும் மதுரை முத்துவுடனான அவரது காமெடி சிரிக்க வைக்கிறது.

ஸ்ரீகெளரி ப்ரியா காதலுனுக்கம், அப்பாவுக்கும் இடையில் கிடந்து தவிக்கும் மகளை கண்முன் நிறுத்துகிறார். அப்பாஸின் ரீ எண்ட்ரி அம்சமாக அமைந்திருக்கிது. ஒரு ரவுண்டு வருவார். ஜார்ஜ் மரியான் அனுபவ நடிப்பில் உருக வைக்கிறார். அம்மாவாக நடித்துள்ள கீதா கைலாசம் பெங்களூருக்குச் சென்று செய்யும் அலப்பறைகள் கொஞ்சம் அதிகம்தான் என்றாலும் ரசிக்க வைக்கிறது. ஜஸ்டின் பிரபாகரனின் இசை பெரிய பலமாக உள்ளது. பெங்களூர் மற்றும் கோவை¬ò அழகாக காட்டிய ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர் மொத்த படத்தையே கலர்ஃபுல்லாக கொடுத்துள்ளார்.

கிளைமாக்ஸ் ரயில் காட்சி படத்திற்கு பெரிய பிளஸ். அப்பா மற்றும் மகன்கள் சென்டிமெண்ட் படங்களின் வெற்றி பட்டியலில் இணைகிறான் ஹேப்பி ராஜ்.

Leave A Reply

Your email address will not be published.