பேரவர்: பிரிந்தும் பிரியாத காதல்

காதல்கள் சேர்ந்தே பிரியும். ஆனால் பிரிவதெற்கென்றே திட்டமிட்டு சேரும் காதலை பார்த்திருக்கிறீர்களா? அதுதான் இந்தப் படம்.

கிராமத்து தாத்தா ஒய்.ஜி.மகேந்திரன் வளர்ப்பான நாயகன் சுதர்சன கோவிந்த் திருமணத்திற்கு மேட்ரி மோனி போன்ற காதலுக்கு ஒரு ஆப் கொண்டு வருகிறார். ஆனால் அவருக்கு காதல் அÂபவமில்லைல இதனால் ஒரு காதலை தேடுகிறார்.

இதேபோல ஹீரோயின் அர்ச்சனா ரவி சினிமா இயக்°னராக முயற்சிக்கிறார். நல்ல காதல் கதையாக கொண்டு வாருங்கள் தயாரிக்கிறேன் என்கிறார் தயாரிப்பாளர், இதù£ல் தானே காதலித்து அனுபவித்து ஒரு படத்தை இயக்க முயற்சிக்கிறார். இப்படி தொழில் ரீதியாக காதலித்து பார்க்க தொடங்கும் இவர்களின் காதல் என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் கதை.

சற்றே கனமான புதிய கோணத்திலான காதல் கதை. அறிமுக நாயகன் சுதர்சன கோவிந்த், அர்ச்சனா ரவி இருவரும் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். ஒய்ஜி மகேந்திரன் அனுபவ நடிப்பை தந்திருக்கிறார். கிராமத்து போர்ஷன் கதையை தாங்கி பிடிப்ப¶ அவர்தான்.. அஷ்வின் ஹேமந்த் பின்னணி இசை படத்திற்கு பலம்.
முன்பாதியில் காதலும், பின் பாதியில் காதலின் வலியையும் பேசி இருக்கிறார் இயக்குனர் அசோக்குமார் கலைவாணி. விட்டுக்கொடுத்தல் ஒன்றே காதலில் ஜெயிக்க வழி என்பதையும் அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.