பிரேக்அப்பும் வாழ்க்கையின் ஒரு அங்கம்தான்: காந்தி கிருஷ்ணா

செல்லமே, ஆனந்த தாண்டவம் படங்களை இயக்கிய ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி உள்ள படம் ‘பிரேக் பாஸ்ட்’. இந்த படத்தில் ராணவ், ரோஸ்மின், சம்பத்ராஜ், கஸ்தூரி, அர்ச்சனா, கிரித்திக் மோகன், அமிதா ரங்கநாத், சி.ரங்கநாதன், ரவிமரியா, பாலாஜி சக்திவேல் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க, எம்.வி.பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரேம் கிளாசிக் பிக்சர்ஸ் சார்பில் கிரிஜா வரதராஜ், கே.வி.தினேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.

படம் குறித்து ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா அளித்த பேட்டியில் கூறியதாவது: இன்றைய காதல் எப்படி இருக்கிறது, இளம் தலைமுறை அதை எப்படி பார்க்கிறது, பிரிவை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதை பற்றி படம் பேசுகிறது. காதலும், பிரிவும் காலத்திற்கேற்ப மாறி வருகிறது. அதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்பதை சொல்கிறது படம். காதல் பிரச்சினைக்கு தீர்வோ, அறிவுரையோ சொல்லாமல் யதார்த்த்தை பேசுகிற படம்.
இரண்டு காலகட்ட காதலை சொல்லி அதன் இடைவெளி மாற்றங்கள் பற்றி பேசுகிறது. சிறிய பட்ஜெட்டில் படத்தை ஆரம்பித்து பெரிய பட்ஜெட் படமாக மாறி உள்ளது. என்றார்.

Leave A Reply

Your email address will not be published.