ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ராஜா இயக்கத்தில், பலராம் ஜெ. பாலாஜி நடிப்பில், ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி குரல்களில் ‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ இசை ஆல்பம் உருவாகியுள்ளது. இதன் அறிமுக விழா நடந்தது. இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் நடிகர் பலராம் ஜெ பாலாஜி பேசும்போது “கல்லூரி படிக்கும் போது இருந்தே சினிமா துறை மீது எனக்கு ஆர்வம் இருந்தது. அப்பாவும் எனக்கு ஆதரவு கொடுப்பதாக சொன்னார். ஆனால் 2014 இல் அவரது எதிர்பாராத மறைவு காரணமாக குடும்ப தொழிலான ஜுவல்லரி கடை பிசினஸை எடுத்து செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். சில வருடங்கள் கழித்து நமக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. குடும்பத்தினர் சம்மதத்தோடு திரைத்துறையில் வாய்ப்புகள் தேட ஆரம்பித்தேன். சின்ன சின்ன வீடியோக்கள் செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது நண்பர்கள்தான் உனக்கு என ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என உத்வேகம் கொடுத்தார்கள்.
என்னுடைய முதல் பாடல் 2025 இல் வெளியானது. பிறகு நண்பர் ஒருவர் மூலமாக ராஜா சார் அறிமுகம் கிடைத்தது. எடுத்ததுமே ஹீரோவாக படம் செய்யாமல், நமக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு பின்பு படம் செய்யலாம் என ராஜா சாரிடம் சொன்னேன். அவரும் சம்மதம் சொன்னார். அப்படி உருவானதுதான் சைலன்ட் இன்ஃப்ளூயன்சர். சிறுவயதிலிருந்தே என் தந்தைக்கு அடுத்து நான் ரசித்து பார்த்து, ரோல் மாடலாக வைத்திருப்பது தளபதி, இன்றைய முதல்வர் விஜய் சாரை தான். தினேஷ் மாஸ்டர், ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி மற்றும் குழுவினர் அனைவருக்கும் நன்றி. பாடல் வெளியாகிவிட்டது. உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை” என்றார்.