டபுள் ஆக்குபென்ஸி: ஓருடல் ஈருயிர்

குழந்தையில்லாமல் தவிக்கும் போஸ் வெங்கட் – வினோதினி தம்பதிகளு’கு குழந்தை க்கிறது. ஆண் குழந்தையான அந்த குழந்தை இறந்தே பிற’கிறது. இதனால் தன் குழந்தை’கு உயிர் தருமாறு கடவுளை கேட்கிறார் போஸ். அந்த குழந்தைக்கும் உயிர் வருகிறது. ஆனால் அது பெண் குழந்தையாக மாறி இருக்கிறது. எனவே காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பெண்ணாகவும், மாலை 6 மணி முதல் காலை 6 மணிவரை ஆணாகவும் வளர்கிறது குழந்தை.

ரஜினி எனப் பெயரிடப்பட்டு, ஓர் இதயம் இரு உயிர்களாக ஒரே உடலுக்குள் வளர்கிறார்கள். வளர்ந்த பிறகு இருவருக்கும் தனித்தனி காதல் வருகிறது. அதன் பிறகு அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்தான் படம்.

ஆண் ரஜினியாக சந்தோஷும், பெண் ரஜினியாக ரேஷ்மா வெங்கடேஷும் நடித்திருக்கின்றனர். கதைக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார் ரேஷ்மா வெங்கடேஷ். சண்டைக் காட்சிகள், காதல் காட்சிகள், தன் சக உயிரைப் புரிந்துகொள்கிற காட்சி எனச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சந்தோஷ். ஆண் ரஜினியின் காதலி ப்ரியாவாக நடித்திருக்கும் சம்யுக்தா விஸ்வநாதன், பெண் ரஜினியின் காதலன் கார்த்திக்காக வரும் வினோத் கிஷன் இவர்கள் தவிர விடிவி கணேஷ், பக்ஸ் ஆகியோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

சிக்கலான இந்த கதையை எளிமையாக படமாக்கி கவனம் பெறுகிறார் இயக்குனர் அஸ்வின் கந்தசாமி. பேண்டஸி கதைக்கு ஏற்ற கலர்புல் ஒளிப்பதிவை வழங்கியிருக்கிறார் சாந்தகுமார் சக்கரவர்த்தி. சாம் சி.எஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு உதவி இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.