இது யதேச்சையாக நடந்ததா திட்டமிட்டு நடந்ததா என்று தெரியவில்லை. முதல்முறையாக நிக்க அரசியல்வாதிகள் இணைந்து ஒரு கற்பனை சினிமாவில் நடித்துள்ளனர்.நிஜ அரசியல்வாதிகள் பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத் போன்றோர் நடித்திருக்கிறார்கள். அதனால் ஒரு சினிமா பார்த்து அனுபவமாக இல்லாமல் நிஜத்தை பார்த்தது போலவே இருப்பது தான் இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ்.
அரசியலை கிண்டல் செய்து நிறைய படங்கள் வெளிவந்திருக்கிறது ஆனால் அரசியலில் கிண்டல் செய்து அரசியல்வாதிகளே நடித்திருக்கும் முதல் படம் இதுதான்.
பெருந்தலைவர் காமராஜரின் சத்துணவு திட்டத்தால் படித்து பெரும் வெளிநாட்டு தொழிலதிபர் ஆனவர் ராதாரவி. இந்தியா திரும்பும் அவர் காமராஜரையே தோற்கடித்த இந்த மக்களுக்கு ஒரு பாடம் புகட்ட விரும்புகிறார். அதற்கு கோமாளி தலைவன் ஒருவனை தேடுகிறார்.
மக்கள் பிரச்சினை தீர்க்கவென்று போராட்டம் நடத்தி அதன் மூலம்.சம்பந்தப்பட்டவர்களிடம் பணம் பெற்று வாழ்க்கை நடத்தி வருகிறார் தமிழ்க் குடிமகன் என்ற பெயர் கொண்ட ரவி மரியா. அவரை வைத்து ஒரு அரசியல் விளையாட்டை ஆடிப் பார்த்துவிட, ராதாரவி முடிவு செய்கிறார்.
கோல்மால் அரசியல் செய்யும் கல்வி முறையா அதன் மூலம் புகழ்பெற்று உள்ளே வெளியே என்ற கட்சியை தொடங்கி முதல்வராக திட்டமிடுகிறார். இதற்குப் பின்புலமாக ராதாரவியும் அவரது ‘உள்ளே வெளியே,’ கட்சியில் இணைகிறார்.
தேர்தலுக்கு முன் ரவி மரியா விபத்தில் சிக்கி, சிகிச்சைக்காக வெளிநாடு போய்விடுகிறார். எனவே தேர்தலில் உவெ கட்சி வென்றால் முதல்வர் யார் என்ற கேள்வி வர, மக்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து முதல்வராக்கும் ‘நீங்களும் ஆகலாம் சி எம்…’ என்ற பிரச்சாரதத்தை முன்வைக்கிறார் ராதா ரவி .
தேர்தலில் உவெ கட்சி வெற்றியடைய, யார் முதல்வர் ஆனார் . மக்கள் என்ன ஆகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
சமீப கால அரசியல் மற்றும் தேர்தல் அதற்கு பின்னால ஆன நிலைகளைக் கொண்டு இந்த படம் உருவாகி இருப்பதால் ரசிகனுக்கு நெருக்கமாகி விடுகிறது படம். ரவி மரியா காமெடி அரசியல்வாதியாக சிரிக்க வைக்கிறார். ராதாரவி அனுபவ நடிப்பை தந்திருக்கிறார். பழ கருப்பையா நாஞ்சில் சம்பத், கஞ்சா கருப்பு பேரரசு இயல்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள். காமெடியுடன் அரசியல் கலந்து மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார் இயக்குனர் ராம்தேவ்.