தமிழ் ரசிகர்கள் நல்ல படங்களை கொண்டாடுவார்கள்: பஹத் பாசில்

பஹத் பாசில் தயாரிப்பில் பிரேமலு படத்தை இயக்கிற இயக்குநர் கிரீஷ் ஏ டி- இயக்கத்தில் உருவாகியுள்ள மலையாளப் படம் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ நிவின் பாலி, மமீதா பைஜூ, சங்கீத் பிரதாப், ரோஷன் ஷா நவாஸ் ,ஷியாம் மோகன், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அஜ்மல் ஷபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்திருக்கிறார்.
கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான இந்தப் படம் பெரும் பெற்றி பெற்று 100 கோடியை தாண்டி வசூலித்துள்ளது. இந்த நிலையில் இந்தப் படம் இதே பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. ப்ரீமார்க் புரொடக்ஷன் மற்றும் பியூச்சர் ரன்னர் அப் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகிகின்றன.

இதன் தமிழ் பதிப்பு அறிமுக விழா நேற்று நடந்தது. இதில் தயாரிப்பாளரான பஹத் பாசில பேசியதாவது: ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம்- எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. நான்- தினேஷ்- ஷியாம் -ஆகிய மூவரும் இணைந்து தயாரித்திருக்கிறோம். எங்களுடைய நட்பு 2018 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி அற்புதமாக தொடர்கிறது. எங்கள் இதயத்திற்கு நெருக்கமான கதைகளை தேர்வு செய்து நாங்கள் தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்க உள்ளோம். இந்த அழகான திரைப்படத்தை வழங்கியதற்காக இயக்குநர் கிரிஷ் ஏடி உள்ளிட்டஇந்த படக் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் நல்ல படங்களை வரவேற்று கொண்டாடுவார்கள். அவர்களுக்கு இந்த திரைப்படமும் கொண்டாடும் வகையில் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த திரைப்படத்தை வெற்றி பெறச் செய்த மலையாள ரசிகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.

Leave A Reply

Your email address will not be published.