‘இம்மார்ட்டல்’ படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள்: தயாரிப்பாளர் தகவல்

ஏ.கே.பிலிம் பேக்டரி சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரித்துள்ள படம் ‘இம்மார்ட்டல்’.
அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த செப்டம்பர் 4ம் தேதி வெளியானது. இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகப் பெரிய பாராட்டுக்களைக் குவித்து, வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்ட வெற்றி விழா நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் விநியோகஸ்தர் சக்திவேலன் முதலானவர்களுக்கு தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் உயர்தர கைக்கடிகாரம் ஒன்றை பரிசளித்தார் மேலும் நடிகர் ஜிவி பிரகாஷுக்கு பைக் ஒன்றையும் பரிசளித்து அசத்தினார்.

விழாவில் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் பேசியதாவது:

“இம்மார்டல்” திரைப்படம் வித்தியாசமான ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள படம். சிஜி உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களை சிறப்பாக உருவாக்க வேண்டும் என்பதில் படக்குழு ஆரம்பம் முதலே கவனமாக இருந்தது. அந்த முயற்சிக்கு ரசிகர்கள் மற்றும் பத்திரிகை நண்பர்கள் அளித்த ஆதரவும், படத்தைப் பற்றிய சரியான விமர்சனங்களும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

படத்தின் படப்பிடிப்பு தொடங்கி, வெளியீடு மற்றும் புரமோஷன் பணிகள் வரை ஜிவி பிரகாஷ் அளித்த ஆதரவு மிகச் சிறப்பாக இருந்தது, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று படத்தை புரமோட் செய்தோம்.

மேலும், படத்தை தமிழகத்தில் வெளியிட்ட சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் படத்தை பெரிதாக வெளியிட வேண்டும்” என்ற தனது கோரிக்கையை ஏற்று ஆரம்பத்தில் 250-க்கும் மேற்பட்ட திரைகளில் படத்தை வெளியிட்டதுடன், படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பல திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் மற்றும் பெரிய திரைகள் ஒதுக்கப்பட்டது. குறிப்பாக சனி, ஞாயிறு நாட்களில் படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக பல திரையரங்குகளில் திரையிடல் அதிகரிக்கப்பட்டது பெரிய மகிழ்ச்சி.

“இம்மார்டல்” படத்தை வெற்றிப் படமாக கொண்டு வந்த தனது ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிக்கு அனைவரின் ஒத்துழைப்பும் முக்கிய காரணம் அனைவருக்கும் நன்றி. என்றார்.

Leave A Reply

Your email address will not be published.