புணர்த்தம் புரொடக்ஷன் சார்பாக பிரதீப் ராஜ் தயாரித்துள்ள படம் ‘அரூபி’. ஜாய் மேத்யூ, வைசாக் ரவி, நேஹா சாவ்லா, சாக் ஷி பாதலா, சிந்து வர்மா, கிரண் ராஜ், கண்ணன் சாகர் உள்பட பலர் நடித்துள்ளனர். கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். ஆமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அபிலாஷ் வாரியார் இயக்கியுள்ளார். மலையாளத்தில் உருவாகியுள்ள இந்த படம் தமிழிலும் வெளியாகிறது. இரண்டு மொழிகளிலும் நாளை வெளியாகிறது.
படத்தின் அறிமுக விழாவில் தயாரிப்பாளர் பிரதீப் ராஜ் பேசும்போது, “என் நண்பரும், இந்தப் படத்தின் நாயகனுமான விஷாக் ரவியுடன் சேர்ந்து இயக்குநர் என்னிடம் இந்தக் கதையைச் சொன்னார். நான் சினிமா துறையைச் சேர்ந்தவன் அல்ல. ஆனால் கதையைக் கேட்டதும் பிடித்தது. என் மனைவி மஞ்சுவின் ஆசீர்வாதத்துடன் இந்தப் படத்தைத் தயாரிக்க முடிவு செய்தேன். அப்போது அபிலாஷிடம் ஒரு விஷயம் மட்டும் சொன்னேன்.
திறமையான இளம் கலைஞர்களைத் தேடி வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றேன். அதன்படி செய்தார். இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் அதன் கதைதான். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு மக்கள் பேசுவார்கள், விவாதிப்பார்கள், தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். அதற்காகவே காத்திருக்கிறேன்” என்றார். ஜூலை 3ம் தேதி இப்படம் தமிழ், மலையாளத்தில் வெளி வருகிறது” என்றார்.
படம் குறித்து அபிலாஷ் வாரியர் கூறுகையில், ‘‘அனைத்து மொழி ரசிகர்களும் பார்த்து ரசிக்கும் வகையில் படம் உருவாகியுள்ளது. பின்னணி இசை அமைப்பாளர் கோபி சுந்தர், ஒளிப்பதிவாளர் ரோபி வர்கீஸ் ராஜ், எடிட்டர் கிஷோர் மோகன் உள்பட அனுபவம் கொண்ட டெக்னீஷியன்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்’ என்றார்.
இந்த படத்தின் மூலம் இரண்டு வடநாட்டு நாயகிகள் அறிமுகமாகிறார்கள். படம் குறித்து நேஹா சாவ்லா கூறும்போது, ‘நான் டெல்லியை சேர்ந்தவள். ஹாரர் படமான இது, 300 ஆண்டுகள் பழமையான வீட்டில் படமாக்கப்பட்டது” என்றார்.
சாக்ஷி படாலா கூறுகையில், ‘பேசும் மொழி எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. எனினும், மலையாளத்தில் எனது முதல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாடலின் அர்த்தம் புரியவில்லை என்றாலும், அதன் வரிகளை கற்றுக்கொண்டு சிறப்பாக நடனமாடினேன். தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை முதல் மலையாளப் படத்திலேயே கிடைத்துள்ளது” என்றார்.