பத்தா: பூனையிடம் தோற்ற புலி

ஒரு பெரிய தாதா ஒரு சிறுவனின் அன்பு க்கு முன்னால் மண்டியிட்ட கதை ஒன்றும் புதிதல்ல. ஆனால் அது சொல்லப்பட்ட விதம் புதுசு.

அந்த ஊருக்கே பெரிய வஸ்தாது பத்தா என்கிற (விஜய் சேதுபதி). அவரை கண்டால் ஊரே நடுங்கும். சபரி (சாய் ப்ரித்வி ராஜ்) என்ற பள்ளிச் சிறுவனுக்கு பயம். ஒருநாள் கோடை விடுமுறையில் தனக்குச் சொந்தமான விளையாட்டுப் பொருளை எடுக்க, யாருக்கும் தெரியாமல் பள்ளிக்குச் செல்கிறான் சபரி.அங்கே கழிவறையில் பத்தாவும் இருக்க, அது தெரியாமல் கதவைப் பூட்டி விடுகிறான். மீண்டும் சென்று கதவைத் திறந்தால் எங்கே பத்தா தன்னைக் கொன்றுவிடுவாரோ என அச்சம் கொள்கிறான்.

பத்தா கழிவறையில் இருந்து வெளியில் வந்தாரா? தன்னை பூட்டியவனை கண்டுபிடித்தாரா? என்ன செய்தார் என்பது மீதி கதை. விஜய்சேதுபதிகு நடுவுல கொஞ்சம் பகத்த காணோம் படத்தின் மூலம் அடையாளம் கொடுத்த பாலாஜி தரணிதரன் இயக்கி இரு’கிறார்.

வழக்கமான அதே குறும்பும், குசும்பும் மிக்க விஜய்சேதுபதிதான் இதிலும். மனுஷனை எத்தனை படத்தில் ஒரே மாதிரி பார்த்தாலும் சலிப்பதில்லை.
கணவனின் கொடுஞ் செயல்களால் மனைவிக்கு எப்படி அழுத்தமும், பதற்றமும் ஏற்படுகிறது என்பதை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் லிஜோமோல் ஜோஸ். அக்கறை நிறைந்த கோபம், காதல் என கலந்து கட்டி அடிக்கிறார்.

நடுக்கத்தையும் அப்பாவித்தனத்தையும் தனது கதாபாத்திரத்திற்குள் கவனமாக அடைத்துக் கைதட்டல் வாங்குகிறார் சபரியாக வரும் சாய் ப்ரித்வி ராஜ். விசும்பலோடு தனது பயத்தை பத்தாவிடம் வெளிப்படுத்தும் காட்சியில் நெகிழவும் வைக்கிறார். ஹரிகிருஷ்ணன், சாந்தி பாலசந்தர், விஷ்ணு கோவிந்த், பாலமுருகன் சஹஸ்ரா ஸ்ரீ, அர்ஜுன் சிதம்பரம், இஸ்மத் பானு ஆகியோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்..

80ஸ் சினிமா உணர்வை லைட்டிங்கிலும், ஃப்ரேம்களிலும் கடத்துகிறார் ஒளிப்பதிவாளர் செல்வகுமார் . சாய் அபயங்கர். கானா பாடலில் தாளம் தட்ட வைப்பதோடு, ‘மகளே’, ‘மொழியே’ என எமோஷனல் ஏரியாவிலும் கலக்கியிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.