அன்பில் அவன்: அன்பு, ஆக்ஷன் கலந்த காக்டெயில்

கபெரிய கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த பிரீத்தி முகுந்தன் நடுத்தர வர்’கத்தை சேர்ந்த அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அசோ’ செல்வனுக்கு மனைவி என்றால் உயிர். மலையின் நடுவில் அழகான வீடு ஒன்றை வாங்கி அதில் வாழ வேண்டும் பணத்திற்காக அதே வீட்டை ஹோம்ஸ்டேவாக மாற்ற வேண்டும் என்பது அவரது கனவு.
மனைவின் கனவை நிறைவேற்ற இருக்கிற எல்லாவற்றையும், விற்று வங்கியில் கடன் வாங்கி முன்பு ஜமீன் பரம்பரை வாழ்ந்த ஒரு பழைய வீட்டை வாங்குகிறார்.

அந்த வீட்டின் மீது பல வருடங்களாக கண் வைத்திருந்த உள்ளூர் எம்எல்ஏ அசோக் செல்வனுக்கு மறைமுகமாக தொல்லை கொடுத்து விரட்ட நினைக்கிறார். அவரின் தொல்லை எல்லை மீறும்போது என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் மீதி கதை. அழகான வீடு கட்டி வாழ நினைத்தவர்களுக்கு அது எப்படி உயிர் பிழைத்தலுக்கான போராட்டமாக மாறுகிறது என்பதே அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திகேயனின் ‘அன்பில் அவன்’.

அன்பையும் அக்கறையையும் மிகையின்றி வெளிப்படுத்தும் கணவராக அசோக் செல்வன் இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இரண்டாம் பாதியின் ஆக்ஷன் காட்சிகளிலும் உழைப்பைக் கொட்டியிருக்கிறார். காதல், கோபம், துணிச்சல் என இயலின் வெவ்வேறு மனநிலைகளை நன்றாக வெளிப்படுத்துகிறார் ப்ரீத்தி முகுந்தன். இருவருக்குமான கெமிஸ்ட்ரி படத்தின் முக்கிய பலம்.

கதிர்பாலு, மகா டெல்லி கணேஷ், சபுமோன் உள்ளிட்டோர் வில்லத்தனத்துக்குத் தேவையான மிரட்டலைக் கொடுக்கிறார்கள். கோவிந்த் வசந்தாவின் இசை, காதல் காட்சிகளுக்கு மென்மையையும் ஆக்ஷன் காட்சிகளுக்குப் பரபரப்பையும் சேர்க்கிறது. கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவும் இந்த இரு பகுதிகளின் வெவ்வேறு ட்ரீட்மென்ட்டுகளுக்குத் துணை நிற்கிறது.
அன்பு பாதி, ஆக்ஷன் மீதி என கலகலப்புக்கு கியாரண்டி தருகிறது படம்.

Leave A Reply

Your email address will not be published.