கண்ணன் ரவி தயாரிக்கும் ‘செங்குலம்’

கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரிக்கும் படத்திற்கு ‘செங்குலம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கிஃப்ட்சன் ராபர்ட் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், காஷ்மீரிலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் 2027-ம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் கரிசல் காட்டின் மண்ணில் ஒரு சிவப்பு நிற வளையல் வைக்கப்பட்டிருக்கிறது. அப்போது ரத்தம் தோய்ந்த வேல்கம்பு ஒன்று வேகமாகப் பாய்ந்து வந்து அந்த வளையலைத் தாக்கி உடைத்துச் சிதறடிக்கிறது. அதைத் தொடர்ந்து, அந்தச் சிதறல்களுக்கு மத்தியில் ‘செங்குலம்’ என்ற படத்தின் தலைப்பு வெடித்துத் தோன்றுகிறது.

Leave A Reply

Your email address will not be published.