ஜென்ம நட்சத்திரம்: ஹாலிவுட் பாணி திகில்

மணிவர்மன் இயக்கத்தில் தமன் நடித்த ‘ஒரு நொடி’ படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம், ‘ஜென்ம நட்சத்திரம்’. இதில் மால்வி மல்கோத்ரா, காளி வெங்கட், முனீஷ்காந்த், தலைவாசல் விஜய், வேல.ராமமூர்த்தி என பலர் நடித்துள்ளனர். கேஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். அமோகம் ஸ்டூடியோஸ், வைட்லேம்ப் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

தமன் மற்றும் அவரது காதலி மால்வி மற்றும் நண்பர்கள் ஒரு ரிசார்ட்சில் விடுமுறையை கொண்டாட செல்கிறார்கள். அங்கு சில அமானுஷ்ய விஷயங்களை உணர்கிறார் மால்வி. திடீரென ஒரு நாள் காளி வெங்கட் பயங்கரமான வெட்டுக் காயங்களுடன் தப்பி இவர்களிடம் வருகிறார்.

தான் அரசியல்வாதி வேல ராமமூர்தியின் உதவியாளர் என்றும் அவரிடம் மகள் ஆபரேஷனுக்கு பணம் தர மறுத்து விட்டதால் அவரது 57 கோடி ரூபாய் பணத்தை எடுத்து வந்து விட்டதாகவும், அந்த பணத்தை மறைத்து வைத்த இடத்தை கூறிவிட்டு இறந்து விடுகிறார். பணத்தை எடுத்து அவரின் மகளுக்கு சிகிச்சை செய்து விட்டு மீதி பணத்தை பங்குகொள்ள திட்டமிடுகிறார்கள். அந்த திட்டம் நிறைவேறியதா என்பதுதான் படத்தின் கதை.

பணத்தை தேடி போகிற குழுவிலிருக்கிற தமன் அக்ஷன், மால்வி மல்ஹோத்ரா ஜோடி பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை கண்டு அதிர்வதும், ரத்தம் சிந்துவதுமாய் வேகமெடுக்கிற காட்சிகளின் தேவைக்கேற்ப கச்சிதமாக நடித்திருக்கிறார்கள், சிவம், அருண் கார்த்தி, முனீஷ்காந்த் ஆகியோரும் உதவுகிறார்கள். சப்ஜெக்ட்க்கு ஏற்ற பொருத்தமான பின்னணி இசையைத் தந்திருக்கிறார் சஞ்சய், ஒளிப்பதிவும் தரம்.

ஹாலிவுட் திகில் பட ரசிகர்களாக இருந்தால் இந்த படத்திற்கும் ஒரு விசிட் அடிக்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.