நான் உங்கள் வீட்டு பிள்ளை: ‘யாதும் அறியான்’ நாயகன் தினேஷ் பேச்சு

பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், எம்.கோபி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘யாதும் அறியான்’ படத்தில் அறிமுக நடிகர் தினேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரானா நடித்திருக்கிறார். இவர்களுடன் விஜய் டிவி ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், அப்புக்குட்டி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நாளை இந்த படம் வெளிவருகிறது.

இதில் படத்தின் நாயகன் தினேஷ் பேசியதாவது: நானும் மீடியா பேமிலியில் இருந்து வந்திருக்கிறேன், நீங்கள் எனக்கு உத்துழைப்பு கொடுத்து இந்த படத்தை மக்களிடம் சேர்க்க வேண்டும். இந்த கதையை இயக்குநர் என்னிடம் பீல் பண்ணி சொன்னார், அதனால் தான் நான் ஒத்துக்கொண்டேன்.

நான் உங்க வீட்டுப்பிள்ளை, என்னை உச்சத்திற்கு கொண்டு செல்லவில்லை என்றாலும், ஒரு நல்ல நடிகர் என்ற இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் புதுமுகங்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்கள் தான், அவர்களுக்கு நீங்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என்றார்.

Leave A Reply

Your email address will not be published.