‘உசுரே’ படத்தில் சித்தூர் உண்மை சம்பவம்

ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் “உசுரே” திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், இயக்குனர் பேரரசு, மிர்ச்சி சிவா இயக்குனர் சுப்ரமணிய சிவா, இசையமைப்பாளர் சி சத்யா, லோகேஷ் அஜில்ஸ், இயக்குனர் வாலி அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்த படத்தில் பல வருட இடைவெளிக்கு பிறகு மந்த்ரா ரீ எண்ட்ரி கொடுக்கிறார். விழாவில் அவர் பேசியதாவது: ரொம்ப நாளைக்கு அப்புறமா மறுபடியும் தமிழ்ல படம் பண்ணனும்னு ஒரு ஆசை.. அதற்கான நேரத்திற்காக காத்திருந்தபோது.. இயக்குனர் நவீனும் தயாரிப்பாளர் மவுலியும் இந்த கதையை சொல்லும்போது நான் உடனே ஓகே சொல்லிட்டேன்.. ஒரு இண்டிபெண்டன்ட் உமனா சேலஞ்ச் இருக்கிற கேரக்டரா நடிச்சிருக்கேன்.. ஒரு படத்திற்கு நான்கு தூண்கள் கண்டிப்பாக தேவை அந்த வகையில் இந்த படத்திற்கு நான்கு தூண்களாக ப்ரொடியூசர் டைரக்டர், டிஓபி, அண்ட் மியூசிக் அமைஞ்சிருக்கு.

அடுத்து ஹீரோ டீஜய், அவர் செட்டில் பார்த்தீங்கன்னா நல்ல கலகலப்பாக இருந்தாலும் ஷாட் னு சொல்லும்போது அந்த கேரக்டராவே மாறிடுவாரு அந்த அளவுக்கு டெடிகேட்டிவ் அடுத்து ஜனனி, ஜனனி என் பொன்னாகவே மாறிட்டாங்க.. உசுரே படத்துக்கும் எனக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.” என்றார்.

நடிகர் டீஜே பேசுகையில், “இந்த படத்தை ஆரம்பித்த நாட்களை நினைத்து பார்க்கையில் ரொம்ப பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கு. என்னை இந்த அளவுக்கு அழைத்து வந்தது இசை தான். சிறு வயது முதல் இருந்தே அவ்வளவாக யாரிடமும் பேசியது இல்லை இசையிடம் மட்டுமே பேசி வந்தேன். என் உணர்வுகளை பாடல் வரிகள் மூலம் பாடி தயாரித்தும் வந்தேன். எனது 16 வயதினில், முட்டு முட்டு பாடல் மூலமாக உலகத்திற்கு அறிமுகமானேன். எந்த சினிமா பேக்ரவுண்டும் இல்லாத ஒரு ஈழத் தமிழ் குடும்பத்திலிருந்து வந்த நான் டிஜே அருணாச்சலம். என்னை தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த என் குரு வெற்றிமாறன் அவர்களுக்கு என் முதல் வணக்கமும் நன்றியும். ஒரு வேல் முருகனா இந்த உலகத்துக்கு ஒரு நடிகனா என்னை அறிமுகப்படுத்தியதற்கு வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி.

அசுரன் என்ற ஒரு படத்தினால் எனக்கு நிறைய சந்தோஷமும், என் வாழ்க்கையும் மாறியது. அந்த ஒரு படத்தை பார்த்துவிட்டு வந்து என்னிடம் கதை சொன்ன அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி. என்மேல் நம்பிக்கை வைத்த அந்த இயக்குநரில் ஒருவரான நவீனுக்கு நன்றி. சித்தூரில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். அசுரன் படத்தில் நடித்த கதாபாத்திரத்திற்கு எதிர் மறை ஆன ரோல் இந்த படத்துல எனக்கு. நான் சிம்புவின் ரசிகன்,

இப்படத்தில் நடிக்கும் பொழுது எனக்கு சிம்பு நடித்த கோவில் படம் தான் நினைவிற்கு வந்தது. சக்திவேல் கதாபாத்திரத்தை நினைவில் வைத்து தான் இப்படத்தில் நடித்தேன். அருமையான கதையை கொடுத்த நவீனுக்கு நன்றி அடுத்தடுத்து நீங்கள் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அதிக படங்களை இயக்க வேண்டும். 22 நாட்களில் முடித்த படம் அழகாக வந்திருக்கு. ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் தயாரிப்பாளர் மவுலி அவர்களுக்கு நன்றி.” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.