தேரே இஷ்க் மே: தனுஷின் மற்றுமொரு பாலிவுட் படிக்கட்டு

தனசும், அவரது தந்தையும் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் என்றாலும், டெல்லியில் வசிப்பவர்கள். கல்லூரி மாணவராக இருக்கும் தனுஷ் அடிதடி கலாட்டா என்று ஜாலியாக இருக்கிறார். அவரது கல்லூரியில் ஆராய்ச்சி மாணவியாக இருக்கிறார் கிருத்தி சனோன். தனது ஆராய்ச்சிக்காக தனுஷை தேர்வு செய்து அவரை நல்லவராக மாற்ற முயற்சிக்கிறார். இந்த முயற்சியில் காதலும் மலர்கிறது.

ஆனால் காதலுக்கு கீர்த்தியின் அப்பா கடும் எதிர்ப்பு. பெரும் கல்வி குடும்பத்தை சேர்ந்த அவர் ஐஏஎஸ் பாஸானால் காதலை ஏற்பதாக சொல்கிறார். சுட்டுபோட்டாலும் படிப்பு வராத தனுஷ் ஐஏஸ் ஆனாரா? கீர்த்தியை மணந்தாரா என்பது மீதி கதை. ஆக்ஷன், சென்டிமெண்ட், ரொமான்ஸ் என மூன்றையும் கலந்து கதை சொல்கிறார் இயக்குனர் ஆனந்த் எல்.ராய்.

ரொமான்டிக் இளைஞனாகவும் ஆக்‌ஷன் களத்திலும் தன்னுடைய அக்மார்க் நடிப்பை தந்திருக்கிறார் தனுஷ். தனுஷை திருத்த நினைப்பவராகவும், குற்றவுணர்ச்சியில் சிக்கித் தவிப்பவராகவும் நடிப்பில் வெவ்வேறு பரிமாணங்களைக் காட்டி இருக்கிறார், கிருத்தி சனோன்.

கண்டிப்பான தந்தையாக இருந்தாலும் ஆங்காங்கே மகனுக்காக அன்பானவராக மாறும் பிரகாஷ் ராஜ் நடிப்பால் கவர்கிறார்.
நாயகியின் தந்தையாக டோட்டா ராய் சௌத்ரி, கல்லூரி நண்பன் பிரயான்ஷு பயனூளி என வருகிறவர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக தந்திருக்கிறார்கள்.

முழுமையான திரையனுபவத்தை தந்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் துஷார் கண்டி ரே மற்றும் விஷால் சின்ஹா. இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான், பாடல்களில் பாடலில் தாளம் போட வைக்கிறார்.
நல்ல பட விரும்பிகளுக்கு நல்ல விருந்து.

Leave A Reply

Your email address will not be published.