ஐபிஎல்: வாசன் அறிமுகம், கிஷோர் கலக்கல்

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் நாயகனாக அறிமுகமாகியுள்ள படம் . கருணாநிதி என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். கிஷோர் , போஸ் வெங்கட் , அபிராமி , சிங்கம்புலி ஆகியோர் நடித்துள்ளார்கள் . அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார்.

படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்…

நடுத்தர வர்கத்தை சேர்ந்த கிஷோர் தனது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார், நிரந்தர வேலையை இழந்து விட்டதால் சொந்தமாக கார் வாங்கி அதனை வாடகைக்காக ஓட்டி வருகிறார். போலீஸ் அதிகாரியான போஸ் வெங்கட் விசாரணையின்போது ஒரு குற்றவாளியை அடித்து கொன்றுவிடுகிறார். இந்த கொலை பழியை கிஷோர் மீது சுமத்தி தான் தப்பி விட திட்டமிடுகிறார்.

டெலிவரி பாயாக இருக்கும் டிடிஎஃப் வாசன் கிஷோரின் மகளை காதலித்து வருகிறார் . காதலியின் தந்தையான கிஷோரை இந்த பிரச்சனையில் இருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை

வாசன்தான் நாயகன் என்றாலும், கதையும் பெரும்பாலான காட்சிகள் கிஷோரை மையப்படுத்தி அமைந்திருக்கிறது. கிஷோரும் தனது அனுபவ நடிப்பால் படத்தை தாங்கி பிடிக்கிறார்.

கிஷோரின் மனைவியாக வரும் அபிராமி , போஸ்வெங்கட் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளார்கள். அஸ்வின் விநாயகமூர்த்தி பாடல்களை சிறப்பாக வழங்கியுள்ளார்.

லாக்கப் டெத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கருணாநிதி.

Leave A Reply

Your email address will not be published.