Project Hail Mary : விண்வெளி நட்பு

சத்தமில்லாமல் சில ஹாலிவுட் படங்கள் சாதனை படைத்துவிட்டுச் செல்லும் அப்படியான ஒரு படம் இது. பில் லார்ட் மற்றும் கிறிஸ்டோஃபர் மில்லர் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படம், ஆண்டி வீயரின் நாவலை அடிப்படையாகக் கொண்டது.

படத்தின் கதை இதுதான்; ரய்லண்ட் கிரேஸ் (ரையான் கோஸ்லிங்) அண்டசசராசரங்களின் நடுவில் ஒரு விண்கலத்தில் கண்விழிக்கிறார். அவருக்குத் தனது கடந்த கால நினைவுகள் மறந்து விட்டது. தான் ஒரு விண்வெளி வீரரே அல்ல, ஒரு உயிரியல் ஆசிரியர் என்பது அவருக்கு மெல்ல நினைவுக்கு வருகிறது. சூரியனை அழித்துக் கொண்டிருக்கும் நுண்ணுயிரிகளைத் தடுத்து, உலகைக் காக்கும் ஒரு பயணத்தில் அவர் அனுப்பப்பட்டிருப்பது தெரியவருகிறது.

இன்னொரு புறம் மற்றொரு கிரகத்திலிருந்து தனது உலகைக் காக்க வந்த ராக்கி எனும் விசித்திரமான உருவம் கொண்ட ஏலியனைச் சந்திக்கிறார். மொழி தெரியாத இரு வேறு உலகங்களைச் சேர்ந்தவர்கள் எப்படித் தொடர்புகொண்டு, இணைந்து தங்கள் கிரகங்களைக் காக்கிறார்கள் என்பதே படத்தின் கதை.
ரையான் கோஸ்லிங் ஒற்றை ஆளாக தாங்குகிறார். ‘ராக்கி’ கதாபாத்திரம், குழந்தைகளையும் கவரும் ஏலியன்களிலேயே மிகவும் அழகான ஒன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் அதிகாரியான எவா ஸ்ட்ராட், ஒரு சாமான்ய ஆசிரியரான கிரேஸை எப்படி இந்த விபரீதமான மிஷனுக்குள் இழுக்கிறார் என்பது பிளாஷ்பேக்காக சொல்லப்படுகிறது.
அறிவியல் படமாக இருந்தாலும், கிரேஸுக்கும் ராக்கிக்கும் இடையே மலரும் நட்புதான் படத்தின் ஹைலைட். ‘கிராவிட்டி’ படத்திற்கு பிறகு விண்வெளியில் நின்று மனிதம் பேசியிருக்கும் படம்.

Leave A Reply

Your email address will not be published.