நீளிரா: பூகம்பத்தின் நடுவில் ஒரு பூ

ஈழத் தமிழர்களை பற்றி நிறைய படங்கள் வெளி வந்திருக்கிறது அவை பெரும்பாலும்ஆவண படங்களாகவும், யுத்தம் தொடர்பான படங்களாகவும் இருக்கும் ஆனால் இதில் இருந்து சற்று மாறுபட்டு ராணுவத்திற்கும் ஈழத் தமிழர்களுக்கும் உள்ள யுத்தம் சார்ந்த விஷயங்கள் மையப்படுத்தி உருவாகியுள்ளது இந்த படம்.

ஒரு திருமணம் நடக்கவிருக்கும் வீட்டிற்குள் திடீரென இந்திய அமைதிப்படையினர் நுழைகிறார்கள், அந்த வீட்டில் விடுதலை போராளிகள் இருக்கிறார்களா என்று தேடுகிறார்கள். அதே நேரத்தில் அமைதிப்படையை தாக்குவதற்கு விடுதலை புலிகள் அந்த வீட்டை நோக்கி வருகிறார்கள். இப்படியான சூழ்நிலையில் அந்த குடும்பத்தின் மனநிலை எப்படி இருக்கும்.. ராணுவத்தினரின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதுதான் படம்.

1988 காலகட்டங்களில் இலங்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் ஈழத் தமிழரான இயக்குனர் சோமீதரன்.

நவீன் சந்திரா இந்திய அமைதி படை வீரராகவும் , சனத் விடுதலைப் புலிகள் இயக்க தளபதியாகவும் நடித்துள்ளனர். திருமண வீட்டு உறுப்பினர்களாக கபிலா வேணு, ரூபா கொடுவாயூர், சித்து குமரேசன், விது, நவ யுகா, சுவாதி கிருஷ்ணன், நமச்சிவாயம் தம்பி பிள்ளை, கயல் வின்சென்ட், ரோஹித் நடித்துள்ளனர்.

படத்தில் நடித்துள்ள அனைவருமே அந்தந்த கேரக்டராகவே வாழ்ந்து இருக்கிறார்கள். ஒரு திருமண வீட்டுக்குள் துப்பாக்கி முனையில் அவர்களின் பதட்டத்தை நாங்கள் பாத்திரங்களில் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர்.

கேவின் பெண்ணின் இசையும் செல்வரத்தினம் பார்த்திபனின் ஒளிப்பதிவும் படத்தின் தரத்தை உயர்த்திப் பிடிக்கிறது.
போர்களைப் பற்றி பேசும் படங்களுக்கு மத்தியில் அந்தப் போர்களுக்குள் சிக்கித் தவிக்கும் மக்களைப் பற்றி பேசி இருக்கிறது இந்த படம்.

எல்லா போர்களும் எல்லா பிரச்சனைகளும் வன்முறையில் முடியாது என்பதை உணர்வுபூர்வமாகவும் சொல்லி இருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.