சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இது. ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் அபர்ணதி, கிஷோர், பிரகாஷ் ராஜ், சங்கீதா, பவானி ஸ்ரீ நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்து உள்ளார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சென்னையின் புறநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அபர்ணதி, – அனந்த் நாக் தம்பதியின் பெண் குழந்தை காணாமல் போகிறது. அந்த குழந்தையை கண்டுபிடிக்க வருகிறார்கள் காவல்துறை அதிகாரிகளான பரத், பவானி ஸ்ரீ. காணாமல் போன குழந்தை பிணமாகே கிடைக்கிறது. தொடர்ந்து மேலும் சில கொலைகள் நடக்கிறது. உண்மையில் என்ன நடக்கிறது. யார் இதை செய்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் செல்லும் வகையில் «சூப்பரான திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் ªஸ்ரீ செந்தில். போலீஸ் அதிகாரி காளிதாஸாக வரும் பரத் நிதாதனமாக தன் கேரக்டரை உள்வாங்கி நடித்திருக்கிறார். புதுமுக நடிகர் அஜய் கார்த்தி அமைதியாக அதே நேரத்தில் அழுத்தமாக நடித்திருக்கிறார்..
அழகான அதிகாரியாக பவானி ஸ்ரீ கவனம் ஈர்க்கிறார். பூவே உனக்காக சங்கீதா கதாபாத்திரம் படத்தின் திருப்பமுனை. சஸ்பென்ஸ் த்ரில்லர் வகை படங்களுக்கான ஒளிப்பதிவை நேர்த்தியாக தந்திருக்கிறார், சுரேஷ் பாலா. அஜய் கார்த்தி தோன்றும் இடங்களில் எல்லாம் ஒரே மாதிரியான சிம்பாலி இசையை தந்து கிலி ஏற்படுத்துகிறார் சாம் சி.எஸ்.
நேர்த்தியான இன்வெஸ்டிகேஷன் கிரைம் திரில்லராக வந்திருக்கிறது காளிதாஸ் 2. அதனால் 3ம் பாகத்தையும் எதிர்பார்க்க வைத்திருக்கிறது.